கூகுளின் 'Live from Paris' அட்டகாசமான AI அம்சம் அறிமுகம்!
சாட்ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவு மிகப்பெரிய அளவில் வளர்ந்து வரும் நிலையில், கூகுள் அதற்கு போட்டியாக கூகுள் நிறுவனது தனது AI சாட்பாக்ஸ் Bard -ஐ அறிமுகம் செய்துள்ளது. பார்ட் (Bard ) என்பது ஒரு AI சோதனை உரையாடல் சேவையாகும். உரையாடல் பயன்பாடுகளுக்கான நிறுவனத்தின் மொழி மாதிரி (LaMDA) மூலம் இயக்கப்படுகிறது. இதனால், பார்ட் பல இணையதளங்களில் இருந்து தகவல்களை சேர்த்து பதிலை உருவாக்குவதன் மூலம் உயர்தர பதில்களை எளிதாக வழங்க முடியும். இந்நிலையில், சாட்ஜிபிடி, இயங்கும் பிங்கை அறிவித்த மைக்ரோசாப்டின் நிகழ்வின் பின்னணியில், கூகுள் அதன் AI-மையமான "லைவ் ஃப்ரம் பாரிஸ் " நிகழ்வுக்கு பாரிஸில் மேடையை அமைத்து வெளியிட்டது.
கூகுள் BARD AI-யின் அறிமுக விழாவில் வெளியிட்ட சிறப்புகள் என்ன?
இந்த அறிமுக விழாவில், கூகுள் அருகில் உள்ள பல தேடல்'களையும் காட்சிப்படுத்தியுள்ளது. ஆண்ட்ராய்டில் வர இருக்கும் அம்சம் கூகுள் லென்ஸைப் பயன்படுத்தி இருக்கும் திரையை விட்டு வெளியேறாமல் உரைகள் மற்றும் படங்களைத் தேடும் திறன் உள்ளது. அதேப்போல், EV டிரைவர்களுக்கு உதவும் வகையில் கூகுள் சில புதிய அம்சங்களையும் வெளியிடுகிறது. கூகுள் மேப்ஸைப் பொறுத்தவரை மின்சார வாகன (EV) ஓட்டுநர்களுக்கான புதிய வரைபட அம்சங்களை தேடல் நிறுவனமும் வெளியிடுகிறது. தற்போதைய போக்குவரத்து, கட்டண நிலை மற்றும் அதிகமான சார்ஜர்களைக் கொண்ட நிலையங்களைக் கண்டறிய பயனர்களுக்கு பெருமளவில் உதவும். அப்படி, ஹோட்டல்கள் அல்லது மளிகைக் கடைகள் போன்ற இடங்களை நீங்கள் தேடும்போது, சார்ஜிங் நிலையங்களையும் கண்டறிந்தால், இவை உடனே காண்பிக்கும்.