Page Loader
சாட்ஜிபிடி-யை சமாளிக்க கூகுள்  Bard AIஐ அறிமுகம் செய்த சுந்தர் பிச்சை!
சாட்ஜிபிடிக்கு போட்டியாக களமிறங்கும் கூகுளின் பார்ட் என்ற AI

சாட்ஜிபிடி-யை சமாளிக்க கூகுள் Bard AIஐ அறிமுகம் செய்த சுந்தர் பிச்சை!

எழுதியவர் Siranjeevi
Feb 07, 2023
11:06 am

செய்தி முன்னோட்டம்

சாட்ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவு பெரியளவில் வளர்ந்துவிட்டது. நாம் கூகுளில் எந்த விஷயத்தை தேடினாலும், பலவித தகவல்களை நமக்குக் காட்டும். ஆனால், இந்த சாட்ஜிபிடி செயலியில் நாம் தகவல்களைத் தேடினால், சரியாக நாம் எதை தேடுகிறோமோ அதை பற்றி அதுவே தானாக செயற்கை நுண்ணறிவு மூலமாக ஆராய்ந்து நமக்கு தேவையான, துல்லியமான விவரத்தை கொடுக்கும். இதனால், இதனை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்த தொடங்கி விட்டனர். இதனால் கூகுள் நிறுவனம் போட்டியை சமாளிக்க, செயற்கை நுண்ணறிவை டெவலப் செய்ய ஆரம்பித்தது. இவர்கள் உருவாக்கும், செயற்கை நுண்ணறிவு கருவிகள் வரும் மே மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, ட்யூப்லெக்ஸ் (Duplex) மற்றும் கூகுள் கிளாஸ் (Google Glass) போன்றவற்றை அறிமுகம் செய்தது.

கூகுளின் Bard AI

கூகுள் நிறுவனத்தின் பிரத்யேக Ai: Bard Ai

இந்த புதிய செயற்கை நுண்ணறிவு கருவிகள் பயனர்களுக்கு சரியான மற்றும் பாதுகாப்பான விவரம் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது போன்று கூகுள் நிறுவனம், இமேஜ் எடிட்டிங் ஒன்றையும் உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை, சாட்ஜிபிடி-க்கான போட்டி செயலியை களமிறக்க உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், கூகுள் நிறுவனம் லாம்டா (LaMDA) போன்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான லார்ஜ் லேங்குவேஜ் மாடல்களை "வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில்" வெளியிடும் என கூறியுள்ளார். லாம்டா (LaMDA) என்பது லேங்குவேஜ் மாடல் ஃபார் டயலாக் ஆப்ளிகேஷன்ஸ் (Language Model for Dialogue Applications) என்பதன் சுருக்கமாகும். ஆகமொத்தம் சாட்ஜிபிடிக்கு சவாலான போட்டியாக இருக்கப்போகிறது.