chatgpt போலவே பயன்படும் முக்கியமான 5 AI நுண்ணறிவு தளங்கள்
உலகம் முழுவதும் முக்கியமாக பேசப்படும் ஒரு AI- என்றால் அது சாட் ஜிபிடி(chatgpt) தான். இந்த சாட் ஜிபிடி தவிர மற்ற 5 முக்கியமான AI யை பற்றி இங்கே தெரிந்துகொள்வோம். Chat Sonic சாட் சோனிக் என்ற Ai சாட் ஜிபிடியை முறியடிக்கவே இது வடிவமைக்கப்பட்டுள்ளது. எளிதான வாய்ஸ் கமாண்ட் மூலம் நமக்கு பதிலை வழங்குகிறது. DeepL write இந்த DeepL write என்பது எழுதுவதற்கு பயன்படும் ஒரு செயற்கை நுண்ணறிவு ஆகும். இதனைக்கொண்டு ஆங்கிலம் மற்றும் ஜெர்மானிய மொழியில் விரும்பிய அனைத்தையும் எழுதிக்கொள்ள முடியும். Socratic சாக்ரடிக் நுண்ணறிவு ஆனது, குழந்தைகள் தங்கள் வீட்டு பாடங்களை செய்வதற்கு பயன்படுகிறது. கணிதம், அறிவியல் போன்ற அனைத்து பாடங்களின் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறது.
chatgpt போலவே சிறந்து விளங்கும் முக்கியமான 5 செயற்கை நுண்ணறிவுகள் இங்கே...
You chat யூ சாட் AI ஆனது, கிட்டத்தட்ட இதுவும் ஒரு சர்ச் என்ஜினை போல் செயல்படும். இணையத்தில் உள்ள சிறந்த தகவல்களை ஒன்று சேர்த்து உங்களுக்கு தேடல் முடிவுகளைத் தருகிறது. இதை பயன்படுத்த, எந்தவித விளம்பரங்களும் காட்டப்படுவதில்லை மற்றும் இது மிகவும் பாதுகாப்பாகவும் இருப்பது இதன் சிறப்பம்சங்களாகும். ChinChilla சின்சில்லா ஆனது, இது சாட் ஜிபிடியை விட மிக அதிக வசதிகளையும் பயன்களையும் வழங்குகிறது. எனவே, இது டீப் மைன்ட்-ஆல் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு Gopher போலவே உருவாக்கப்பட்டாலும், அதனை விட சாக்ரடிக் 4 மடங்கு அதிக தரவுகளை நமக்கு தருகிறது.