பட்ஜெட் தாக்கல் எதிரொலி! கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை;
மாதத்தின் முதல் நாளான இன்று (பிப்ரவரி 01) தங்கம் விலை ஒரு சவரன் ரூ.176 உயர்ந்து அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் விலையானது அடிக்கடி ஏற்றம் இறக்கம் கண்டு வரும் நிலையில் தற்போது ஒரே நாளில் அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.42,880க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.22 உயர்ந்து ரூ.5,360க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து, 24 காரட் தங்கம் சவரன் ஒன்றிற்கு 192 ரூபாய் உயர்ந்து 46,776 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை வெள்ளி கிராம் ஒன்று நேற்று ரூ.74.70 ஆக இருந்தது, இன்று கிராமுக்கு 30 பைசா உயர்ந்து,
தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன? இனி விலை எப்படி இருக்கும்?
ரூ.74.80ஆகவும், கிலோவுக்கு 300 அதிகரித்து ரூ.74,800 ஆகவும் ஏற்றம் கண்டுள்ளது. மத்திய பட்ஜெட் தாக்கல் 2023-2024 ஆம் ஆண்டிற்கான தாக்கலை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கினார். அப்போது பேசிய அவர், பல்வேறு பொருளாதாரா நிலை அறிக்கையை வெளியிட்டார். அதில், தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி வரி குறைக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்த்த நிலையில், அதற்கு எதிராக தங்கம் மற்றும் தங்கம் வெள்ளி வைரம் ஆகியவை இறக்குமதி செய்வதற்கான வரிகள் பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டுவதாக அறிவித்தார். இதனால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், வரும் நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரிக்கும் எனக்கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி, உக்ரைன் ரஷ்யா போர் காரணமாகவும், இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி காரணமாகவும் தங்கம் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது.