இன்றைய நாளின் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
இந்தியாவில் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பவுன் ரூ. 5 ஆயிரத்திற்கு விற்பனை ஆனது. ஆனால் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.5500-க்கும் அதிகமாக விற்பனை ஆகிறது. நாளுக்கு நாள் விலை உயர்ந்து கொண்டே போவதால் நகை வாங்குவதே பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்றைய நாள் மார்ச் 20 ஆம் தேதிபடி, இன்று தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமுமின்றி, ஒரு கிராம் தங்கம் ரூ.5,560-க்கு விற்பனையாகிறது. சவரன் ரூ.44,480-க்கு விற்பனையாகிறது.
தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை விபரம் இங்கே
மேலும், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48,400 க்கு விற்பனையாகிறது. இதேபோன்று, ஒரு கிராம் வெள்ளி ரூ.74.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.74,000-ஆக இருக்கிறது. தங்கத்தின் மீது செய்யப்படும் முதலீடுகளுக்கு தக்க லாபம் கிடைத்து வருகிறது. இதைத்தவிர, பொதுவாக குடும்பங்களில் தங்க ஆபரணங்கள் தலைமுறை தலைமுறையாக கைமாறி கொண்டே இருக்கும். அதனால் தான், குடும்பத்தில் தங்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் அளிக்கப்பட்டு வருகிறது.