இதுவரை இல்லாத உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை! இன்றைய விலை பட்டியல்
தங்கம் விலையானது அடிக்கடி ஏற்றம் இறக்கம் கண்டாலும் ஒரு சில நாட்களில் குறைவது வழக்கம். அந்நாளில் தங்கம் வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். அதிலும் பண்டிகை நாட்களில் தங்கம் விலையானது தாறுமாறாக ஏறும். அந்த வகையில், தங்கம் விலை கடந்த ஒரு வாரகாலமாக இறக்கம் கண்ட நிலையில் கடந்த 4 நாட்களாக மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்றைய நாள் மார்ச் 18 ஆம் தேதிபடி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) விலை சனிக்கிழமை அதிரடியாக சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.44,480-ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேப்போல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.110 அதிகரித்து ரூ.5,560 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை விபரம் இங்கே
24 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.960 அதிகரித்து ரூ.48,520 ஆக விற்பனையாகிறது. வெள்ளியின் விலை தொடர்ந்து வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.30 அதிகரித்து ரூ.74.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,300 அதிகரித்து ரூ.74,400 ஆக விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் மீது செய்யப்படும் முதலீடுகளுக்கு தக்க லாபம் கிடைத்து வருகிறது. இதைத்தவிர, பொதுவாக குடும்பங்களில் தங்க ஆபரணங்கள் தலைமுறை தலைமுறையாக கைமாறி கொண்டே இருக்கும். அதனால் தான், குடும்பத்தில் தங்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் அளிக்கப்பட்டு வருகிறது.