Page Loader
தொடர்ந்து நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுக்கும் தங்கம் விலை - இன்றைய விபரம்!
தங்கம் விலையானது மார்ச் 17 இல் இன்று ரூ.200 உயர்ந்துள்ளது.

தொடர்ந்து நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுக்கும் தங்கம் விலை - இன்றைய விபரம்!

எழுதியவர் Siranjeevi
Mar 17, 2023
12:20 pm

செய்தி முன்னோட்டம்

தங்கம் விலையானது அடிக்கடி ஏற்றம் இறக்கம் கண்டாலும் ஒரு சில நாட்களில் குறைவது வழக்கம். அந்நாளில் தங்கம் வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். அதிலும் பண்டிகை நாட்களில் தங்கம் விலையானது தாறுமாறாக ஏறும். அந்த வகையில், தங்கம் விலை கடந்த ஒரு வாரகாலமாக இறக்கம் கண்ட நிலையில் கடந்த 4 நாட்களாக மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்றைய நாள் மார்ச் 17 ஆம் தேதிபடி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் 22 கேரட் விலை பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.43,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை

தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை விபரம் இங்கே

24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.25 உயர்ந்து இன்று 5,937 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை அதேபோன்று, வெள்ளி விலையும் கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 73.10 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளி 73,100 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தங்கத்தின் மீது செய்யப்படும் முதலீடுகளுக்கு தக்க லாபம் கிடைத்து வருகிறது. இதைத்தவிர, பொதுவாக குடும்பங்களில் தங்க ஆபரணங்கள் தலைமுறை தலைமுறையாக கைமாறி கொண்டே இருக்கும். அதனால் தான், குடும்பத்தில் தங்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் அளிக்கப்பட்டு வருகிறது.