Page Loader
மீண்டும் உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை - இன்றைய விலை விபரம்!
தங்கம் விலையானது மார்ச் 16 இல் இன்று ரூ.320 உயர்ந்துள்ளது

மீண்டும் உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை - இன்றைய விலை விபரம்!

எழுதியவர் Siranjeevi
Mar 16, 2023
11:56 am

செய்தி முன்னோட்டம்

தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வந்தாலும், ஒரு சில நாட்களில் பெரும் உயர்வை நோக்கி செல்கிறது. அப்போது, தங்கம் வாங்க மக்கள் ஆர்வம் காட்டமாட்டார்கள். பண்டிகை நாட்களில் தங்கத்தை வாங்கவே ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதுமட்டுமின்றி, பட்ஜெட் தாக்கலுக்கு பின்னும் தங்கம் விலை ஏற்றத்தை விட இறக்கத்தை அதிகம் சந்தித்து இருக்கின்றது. அந்த வகையில், இன்றைய நாள் மார்ச் 16 ஆம் தேதிபடி, 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.45 உயர்ந்து இன்று 5,891 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை

தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை விபரம் இங்கே

அதேபோல் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 360 ரூபாய் வரை உயர்ந்து 47,128 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.45 உயர்ந்து 5,425 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு ரூ.360 வரை உயர்ந்து 43,400 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெள்ளியின் விலை இந்த நிலையில், வெள்ளி விலையும் கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 72.70 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளி 72,700 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.