தங்கம் விலை இன்று குறைவு - இன்றைய விலை விபரம்
தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வருகிறது. ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் காரணமாக, கடந்த ஆண்டு பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம், வெள்ளி விலை, கடந்த சில நாட்களுக்கு மிகவும் குறைந்த விலைக்கு சரிந்தது. அதன் பின்னர் பட்ஜெட் தாக்கலுக்கு பின் மள மளவென தங்கம் விலை உயரத்தொடங்கியது. இந்த நிலையில், இன்றைய நாள் பிப்ரவரி 22ம் தேதிபடி 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,637 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 45,096 ரூபாய் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை விபரம் இங்கே
அதுவே, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு கிராம் தங்கம் ரூ.5,275ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் சவரனுக்கு ரூ.42,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேப்போல், வெள்ளியின் விலையும் இன்று சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.72.00 ஆகவும், ஒரு கிலோ ரூ.300 உயர்ந்து ரூ.72,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்காவின் ஜனவரி மாத சில்லறைப் பணவீக்கம் அதிகரித்துள்ளதால், அடுத்துவரும் கூட்டத்தில் பெடரல் ரிசர்வ் வட்டிவீதத்தை உயர்த்தும் என்பது உறுதியாகியுள்ளது. இதனால், அந்நிய முதலீட்டாளர்கள் கடன் பத்திரங்களிலும் முதலீட்டை திருப்பியதால் தங்கத்தின் தேவை குறைந்து வருகிறது. மேலும், சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன.