தங்கம் விலை இன்றும் சரிவு - இன்றைய விலை விபரம்;
தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வருகிறது. ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் காரணமாக, கடந்த ஆண்டு பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம், வெள்ளி விலை, கடந்த சில நாட்களுக்கு மிகவும் குறைந்த விலைக்கு சரிந்தது. அதன் பின்னர் பட்ஜெட் தாக்கலுக்கு பின் மள மளவென தங்கம் விலை உயரத்தொடங்கியது. தங்கம் விலை சரிவு இந்நிலையில், இன்று (14/02/2023) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து இன்று 5,692 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேப்போல், ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 40 ரூபாய் வரை குறைந்து 45,536 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இன்றைய நாளின் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
மேலும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.5 குறைந்து 5,330 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 40 ரூபாய் வரை குறைந்து 42640 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து 72.50 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 72,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்திய சந்தை தங்கம் விலை இந்திய சந்தை தங்கம் விலையானது 10 கிராமுக்கு, 161 ரூபாய் அதிகரித்து, 56,687 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இவை கடந்த அமர்வை காட்டிலும், இன்று சற்று மேலாகவே காணப்படுகிறது. இருப்பினும், மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.