வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்கள் முடங்கியது, சாட்ஜிபிடி சேவையிலும் பாதிப்பு; பயனர்கள் அவதி
புதன்கிழமை (டிசம்பர் 11) இரவில் ஒரு குறிப்பிடத்தக்க இடையூறில், மெட்டா தளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை பரவலான செயலிழப்பை சந்தித்ததால், உலகளவில் பயனர்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டனர். பிரச்சினை இரவு 11 மணியளவில் தொடங்கியது. பலரால் மெட்டாவின் சேவைகளை அணுக முடியவில்லை. ஃபேஸ்புக்கின் இணையதளம் பிழைச் செய்திகளைக் காட்டியது. இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் இணைப்புச் சிக்கல்களை எதிர்கொண்டது. மேலும் தளங்களில் செய்தி அனுப்புவது தடைபட்டது. மெட்டா, தனது எக்ஸ் தள கணக்கில் சேவை குறைப்பாட்டால் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளது. மேலும், இதை தொழில்நுட்பச் சிக்கல் என்று கூறியதோடு, பயனர்களுக்கு இறுதிச் சோதனைகளுடன் சேவைகள் 99% மீட்டமைக்கப்பட்டதாக உறுதியளித்தது.
ஒரே ஆண்டில் இரண்டாவது சம்பவம்
இந்த சம்பவம் கடந்த மார்ச் மாதத்தில் ஒரு பெரிய தொழில்நுட்பக் கோளாறால், மெட்டா இயங்குதளங்களில் இருந்து பயனர்களை வெளியேற்றியது மற்றும் கடவுச்சொல் பிழைகள் காரணமாக மீண்டும் உள்நுழைவு முயற்சிகளைத் தடுத்தது. இந்நிலையில், அதன் பிறகு தற்போது மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, வியாழன் காலை, மற்றொரு பெரிய செயலிழப்பு ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடியில் நடந்தது. சாட்ஜிபிடியை அதன் API மற்றும் Sora வீடியோ உருவாக்க சேவைகள் இதனால் பாதிக்கப்பட்டது. அதிகாலை 5:45 மணியளவில் ஓபன்ஏஐ தனது எக்ஸ் பதிவின் மூலம் இதை உறுதிப்படுத்தியது. இதுகுறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சிக்கலை கண்டறிந்துள்ளதாக தெரிவித்ததோடு, அதை விரைவில் தீர்ப்போம் என்று உறுதியளித்துள்ளது.