மனிதர்களுடன் பேசும் AI டைப் ரைட்டிங்: கோஸ்ட்ரைட்டர்
கேரளாவின் கொச்சியை சேர்ந்த வடிவமைப்பாளர் பொறியாளருமான அரவிந்த் சஞ்சீவ் என்பவர் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி தட்டச்சு செய்யும் நபருடன் அரட்டை அடிக்கும் இயந்திரத்தை உருவாக்கி அசத்தியுள்ளார். 70ஸ் 80ஸ் காலக்கட்டத்தில் இந்த டைப் ரைட்டிங் இயந்திரம் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வந்தது. பல அரசு வேலைகளுக்கு இந்த டைப் ரைட்டிங் இயந்திரத்தை பயன்படுத்தி வந்தனர். ஆனால், நாளடைவில் தொழில் நுட்ப வளர்ச்சியால் டைப் ரைட்டிங் மையங்கள் குறைந்து போனது. கணினி, லேப்டாப், ஸ்மார்ட்போன் என தொழில் நுட்பம் நவீன வளர்ச்சியடைந்தது. இதனிடையே தான், கேரளாவை சேர்ந்த நபர் இந்த டைப் ரைட்டிங் இயந்திரத்தை இக்காலத்திற்கு ஏற்ப மாற்றி வடிவடைத்துள்ளார்.
மனிதர்களுடன் அரட்டை அடித்து பேச புதிய டைப் ரைட்டிங்கை வடிவமைத்த இளைஞர்
இதில், AI இணைக்கப்பட்டதால், 'கோஸ்ட்ரைட்டர்' டைப் ரைட்டிங் என்று அழைக்கப்படுகிறது. இதுகுறித்து பேசிய அவர், புதிய சாதனைத்தை விட பழைய சாதனங்களை இக்காலத்திற்கு ஏற்றவாறு புதுமையாக்கித் தர விரும்பினேன். இரண்டு வருடத்திற்கு முன் 1990 களில் பயன்படுத்திய மின்சாரத்தில் உபயோகிக்கப்படும் AX-325 தட்டச்சுப்பொறியை வாங்கி அதில் மாற்றங்களை செய்து வடிவமைத்துள்ளேன். தற்போது இந்த இயந்திரத்தில் இரண்டு பலகைகள் உள்ளன. ஒன்று மைக்ரோகண்ட்ரோலர், அடுத்து ராஸ்பெர்ரி பை. இது OpenAI இன் GPT-3 பொருத்தப்பட்டுள்ளது. ChatGPT ஒரு பெரிய மொழியை இயக்கும் மாதிரியாகும். முக்கியமாக கோஸ்ட்ரைட்டரில் AI-யை பொருத்தியதால் மக்கள் டைப் செய்யும் போது அது கேட்டு, நம்மிடம் பதிலளித்து காகிதத்தில் தட்டச்சு செய்கிறது என சஞ்சீவ் பதலளித்துள்ளார்.