விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய சுற்றுலாப் பயணி தேசிய கொடியை ஏந்தி பரவசம்
செய்தி முன்னோட்டம்
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ஏற்பாடு செய்த ப்ளூ ஆரிஜினின் நியூ ஷெப்பர்ட்-25 சுற்றுலா பயணத்தில் கலந்துகொண்ட, தொழிலதிபரும் விமானியுமான கோபிசந்த் தோட்டகுரா விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய சுற்றுலாப் பயணி என்ற வரலாற்றைப் படைத்தார்.
பூமியிலிருந்து மைல்களுக்கு அப்பால் சென்ற அவர் இந்திய தேசிய கொடியை ஏந்தி பரவசம் அடைந்த தருணத்தை ப்ளூ ஆரிஜினின் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளது.
ஜெஃப் பெஸோஸ் நிறுவிய ப்ளூ ஆரிஜின் விமானம், மூத்த இந்திய விமானி கேப்டன் கோபிசந்த் தோட்டகுரா உட்பட ஆறு பயணிகளை ஏற்றிக்கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை விண்வெளிக்கு புறப்பட்டது.
அந்த விமானம், மேற்கு டெக்சாஸில் உள்ள புளூ ஆரிஜினின் ஏவுதளத்தில் இருந்து காலை 9:36 மணிக்கு(உள்ளூர் நேரம்) புறப்பட்டது.
ட்விட்டர் அஞ்சல்
இந்திய சுற்றுலாப் பயணி தேசிய கொடியை ஏந்தி பரவசம்
Forever changed. #NS25 pic.twitter.com/g0uXLabDe9
— Blue Origin (@blueorigin) May 19, 2024