முதல் ஐபோன் ஜென் மாடல் - ஏலத்தில் விற்பனையான தொகை
ஐபோன் என்றால் பலரும் வாங்கிவிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஐபோனில் இதுவரை 14 மாடல்கள் வரை வந்துள்ளன. ஆனால், முதல் ஐபோன் மாடலின் வரலாற்றை பற்றி உங்களுக்கு தெரியுமா? எப்போதுமே ஆண்ட்ராய்டு போன்களை விட, ஆப்பிளின் ஐபோன் சாதனங்களுக்கு மட்டும் அதிக மதிப்பு இருப்பது வழக்கம் தான். பழைய ஐபோன் மாடல்களை புத்தம் புதிதாக வைத்திருக்கும் போது, ஏல சந்தையில் அதன் மதிப்பு அதிகரிக்கிறது என்பதே உண்மையாகும். ஐபோன் ஜென் 1 மாடலின் தற்போதைய விலை மட்டுமே அதன் அசல் விலையை விட, 100 மடங்கு அதிகமான விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது தான் ஆச்சரியம்.
ஐபோன் ஜென் மாடல் ஏலத்தில் 53 லட்சத்திற்கு விற்பனை
சமீபத்தில் நடந்த ஏலத்தில், ஐபோன் முதல் ஜென் மாடல் சாதனம் 60,000 அமெரிக்க டாலருக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த ஜென் ஐபோன் 2007 இல் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய ஆன்லைன் ஏலத்தில் 63,356.40 அமெரிக்க டாலர்களை எட்டுயுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 52 லட்சத்திற்க்கும் அதிகமான தொகைக்கு சென்றுள்ளது. ஏலம் முதலில் 2,500 அமெரிக்க டாலர்களில் தொடங்கியது. ஆரம்பத்தில் அதிகபட்சமாக 50,000 அமெரிக்க டாலர்கள் வரை ஏலம் செல்லும் என நம்பப்பட்டது. ஆனால், அசல் பேக்கேஜிங் பாக்சில் இருக்கும் ஐபோனின் மதிப்பு எதிர்பார்த்த தொகையை தாண்டி சென்றுள்ளது.