விரைவில் வருகிறது: ஆப்பிள் ஐபோன்களில் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்
ஆப்பிள் நிறுவனம், அதன் எதிர்கால ஐஃபோன்களில், ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவைச் சேர்க்கலாம் என செய்தி வெளியாகியுள்ளன. முன்னணி ஊடகம் ஒன்றின் கூற்றுப்படி, 'பைமோடல் காந்த சீரமைப்பு கூறுகளைப் பயன்படுத்தி, புதிய வயர்லெஸ் சார்ஜிங் சிஸ்டம்' தொடர்பான காப்புரிமைக்கு, ஆப்பிள் நிறுவனம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது, எதிர்காலத்தில், ஏர்பாட்ஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் போன்ற கேட்ஜெட்களை சார்ஜ் செய்ய, ஐபோனின் பின்பக்கத்தைப் பயன்படுத்தப்படலாம். ஆப்பிள், தனது ஐபோன் 12 சீரிஸில் தான், முதல் முறையாக MagSafe சார்ஜிங்கை வழங்கியது. ஆனால், இது ஒரு வழி சார்ஜிங்கை மட்டுமே ஆதரிக்கிறது. மற்ற ஆண்ட்ராய்டு OEMகள் ஏற்கனவே ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கை வழங்குவதால், ஆப்பிளும் அதை செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்
ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங், பெயர் குறிப்பிடுவது போல, உங்கள் ஸ்மார்ட்போனை வயர்லெஸ் பவர் பேங்காக மாற்றுகிறது. இருப்பினும், பெரிய பெர்ஃபார்மன்ஸ் கொண்ட சாதனங்களை சார்ஜ் செய்ய, அதிக நேரம் ஆகலாம் மற்றும் வயர்டு சார்ஜிங்கை விட குறைவான சக்தி வாய்ந்தது. உங்கள் கேட்ஜெட்கள், பேட்டரி குறைவாக இயங்கும் போதோ, அல்லது உங்களிடம் சார்ஜர் இல்லாதபோதோ இந்த தொழில்நுட்பம் கைகொடுக்கும். ஆப்பிள் ஏர்போட்ஸ் கேஸ் போன்ற அப்பிளின் துணை கருவிகள், தனியாக சார்ஜ்ர்-ஐ தேடாமல், ஐபோனின் உள்ளமைக்கப்பட்ட பேட்டரியைப் பயன்படுத்தி வயர்லெஸ் சார்ஜ் செய்யப்பட வேண்டும் என்பதே இந்நிறுவனத்தின் நோக்கம். இந்த தொழில்நுட்பம், வரவிருக்கும் ஐபோன் 15 தொடரில் செயல்படுத்தப்படலாம். இது தற்போதுள்ள பேட்டரிகளை விட பெரிய பேட்டரிகளுடன் வரும் என்று கூறப்படுகிறது.