
இந்தியாவில் வெளியானது புதிய ஃபையர்-போல்ட் அல்டிமேட் ஸ்மார்ட்வாட்ச்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் குறைந்தவிலை ஸ்மார்ட்வாட்ச்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனமான ஃபையர்-போல்ட் நிறுவனம், புதிய பையர்-போஸ்ட் அல்டிமேட் மாடல் ஸ்மார்ட்வாட்ச்சை தற்போது இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது.
வட்ட வடிவில் 1.39 இன்ச் HD டிஸ்பிளேவுடன் வெளியாகியிருக்கிறது புதிய பையர்-போஸ்ட் அல்டிமேட். இன்-பில்ட் மைக்ரேபோன், ஸ்பீக்கர் மற்றும் ப்ளூடூத் 5.0 வசதியைக் கொண்டிருக்கிறது புதிய அல்டிமேட் மாடல் ஸ்மார்ட்வாட்ச்.
நமது மொபைலுக்கு வரும் போன் கால்களை ப்ளூடூத் வசதியுடை இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் மூலமாக நேரடியாக அணுகி வாட்சின் மூலமாகவே பேச முடியும். மேலும், இந்த வாட்சில் கால் ஹிஸ்டரி மற்றும் கான்டாக்ட் சின்க் வசதியையும் ஃபையர்-போல்ஸ் அளித்திருக்கிறது.
ஃபையர்-போல்ட்
ஃபையர்-போஸ்ட் அல்டிமேட்: பிற வசதிகள் மற்றும் விலை
ஓட்டம், நீச்சல், சைக்கிளிங் உள்ளிட்ட 123 வகையான நடவடிக்கைகளை இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் மூலம் டிராக் செய்து கொள்ள முடியும்.
இன்-பில்ட் கேமிங், ஹெல்த் டிராக், ஹார்ட் மானிட்டரிங், SpO2 அளவீடு ஆகியவற்றுக்கான கருவிகளைக் கொண்டிருக்கிறது இந்த புதிய அல்டிமேட் மாடல் ஸ்மார்ட்வாட்ச்.
IP68 ரேட்டிங்கைக் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்வாட்ச்சானது, 270mAh பேட்டரியைக் கொண்டிருக்கிறது. ப்ளூடூத் வசதியுடன் 3 நாட்களும், ப்ளூடூத் வசதியைப் பயன்படுத்தாமல் 7 நாட்களும் பேட்டரி லைஃபைக் கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்வாட்ச்.
லெதர் ஸ்ட்ராப் மற்றும் மெட்டாலிக் ஸ்ட்ராப் என இரண்டு வகையான ஸ்ட்ராப் வேரியன்ட்களுடன் வெளியாகியிருக்கிறது இந்த ஃபையர்-போல்ட் அல்டிமேட்.
லெதர் ஸ்ட்ராப் வேரியன்டானது ரூ.1,799 விலையிலும், மெட்டாலிக் ஸ்ட்ராப் வேரியன்டானது ரூ.1,999 விலையிலும் வெளியிடப்பட்டிருக்கிறது.