60 ஆண்டுக்கு பின் லோகோவை மாற்றிய நோக்கியா - காரணம் என்ன?
நோக்கியா நிறுவனம் தனது 60 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக பிராண்டின் அடையாளத்தை மாற்றியுள்ளது. பிராண்டு அடையாளத்தை மாற்ற முடிவு செய்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து நோக்கியாவின் புதிய லோகோ அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு காரணமாக டெலிகாம் உபகரணங்கள் உற்பத்தியாளர் பிரிவில் தொடர் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் வகையில், நோக்கியா இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும், புதிய லோகோ ஐந்து வெவ்வேறு வடிவங்கள் இணைந்து நோக்கியா எனும் வார்த்தையை பிரதிபலிக்கிறது. பாரம்பரியம் மிக்க புளூ நிற பழைய லோகோவுக்கு மாற்றாக புதிய லோகோவில் தேவைக்கு ஏற்ப அதிக நிறங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
புதிய லோகோவை வெளியிட்ட நோக்கியா நிறுவனம்
இதுகுறித்து,தலைமை அதிகாரி பெக்கா லுண்ட்மார்க் தெரிவிக்கையில், "ஸ்மார்ட்போன்களிடம் அதிக ஒருங்கிணைப்பு இருந்து வந்தது, இருந்தாலும், தற்போதைய காலக்கட்டத்தில் நாங்கள் வியாபார தொழில்நுட்ப நிறுவனம்" என தெரிவித்துள்ளார். எனவே, பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் நோக்கியா போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் சேர்ந்து தனியார் 5G நெட்வொர்க்குகள் மற்றும் தானியங்கி தொழிற்சாலைகளுக்கான கியர்களை விற்பனை செய்கின்றன. இதனால், தொழிற்சாலை ஆட்டோமேஷன் மற்றும் டேட்டாசென்டர்களை நோக்கிய நோக்கியாவின் நகர்வு, மைக்ரோசாப்ட் (MSFT.O) மற்றும் அமேசான் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் நல்ல வளர்ச்சியை கொண்டிருப்பதாக தலைமை நிர்வாகி பெக்கா கூறுகிறார்.