Loading...
பைத்தான் பிழையால் உடைந்த பாதுகாப்பு சாவிகள்: சைபர் பாதுகாப்பு நிறுவனமான eMudhra அறிக்கை
இணைய உலகை உலுக்கிய பாதுகாப்பு சாவி தொடர்பான சம்பவம் குறித்த விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது இ-முத்ரா

பைத்தான் பிழையால் உடைந்த பாதுகாப்பு சாவிகள்: சைபர் பாதுகாப்பு நிறுவனமான eMudhra அறிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Nov 11, 2026
04:10 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவை சேர்ந்த முன்னணி டிஜிட்டல் சான்றிதழ் வழங்கும் நிறுவனமான இ-முத்ரா, கடந்த மாதம் இணைய உலகை உலுக்கிய பாதுகாப்பு சாவி தொடர்பான சம்பவம் குறித்த விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. நிறுவனத்தின் அமைப்பில் கண்டறியப்பட்ட 8 பலவீனமான பாதுகாப்பு சாவிகள் காரணமாக போலியான வலைத்தளங்களை உருவாக்க வழிவகை செய்திருக்கக்கூடிய மாபெரும் தொழில்நுட்பக் கோளாறு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு Python ஸ்கிரிப்டிங் பிழையே காரணம் என இ-முத்ரா ஒப்புக்கொண்டுள்ளது.

பைத்தான் ஸ்கிரிப்டிங்

பைத்தான் ஸ்கிரிப்டிங் பிழையே காரணம்

கடந்த 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற சாவி உருவாக்கும் நிகழ்வில், HSM சாவிகள் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டன.

இருப்பினும், மற்றொரு வன்பொருளுக்குத் தரவுகளை மாற்ற பயன்படுத்தப்பட்ட தனிப்பயன் பைத்தான் ஸ்கிரிப்டில் ஏற்பட்ட ஒரு பிழை காரணமாக, 8 சாவிகள் மிகச் சிறிய எண்களாக சுருக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட சாவிகள் நம்பமுடியாத அளவிற்கு சிறிய எண்களாக இருந்தன; குறிப்பாக அவற்றில் ஒன்று வெறும் 4 என்ற எண்ணாகவே இருந்தது.

4, 56, 66, 115, 155, 156, 230 மற்றும் 237 ஆகிய இந்த எண்கள் பொதுவெளியில் எளிதில் ஊகிக்கக்கூடிய வகையில் இருந்தன.

இந்தச் சாவிகள் எந்தவிதப் பாதுகாப்பு சோதனையும் இல்லாமல் தொடர்ந்து சான்றிதழ்களை வழங்கி வந்ததால், ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக யாருடைய கவனத்திற்கும் வராமல் ரகசியமாகவே இருந்துள்ளது.

மன்னிப்பு

இ-முத்ராவின் அதிரடி நடவடிக்கைகள்

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இ-முத்ரா நிறுவனம் உடனடியாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

பலவீனமான சாவிகளுடன் தொடர்புடைய 16 சான்றிதழ்களையும் நிறுவனம் உடனடியாக ரத்து செய்தது.

வெவ்வேறு புவியியல் இருப்பிடங்களில் உள்ள வன்பொருள்களுக்கு இடையே சாவிகளை மாற்றும் முறையை முழுமையாக நிறுத்திவிட்டு, தற்போது புதிய முறையில் சாவிகளைத் தயாரித்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பாதுகாப்பு தவறுக்காக பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் இ-முத்ரா நிறுவனம் தனது பகிரங்க மன்னிப்பை பதிவு செய்துள்ளது.

ADVERTISEMENT