Page Loader
செலவைக் குறைக்க ட்விட்டரின் புதிய நடவடிக்கை!
சம்பளத்துடன் கூடிய விடுப்பு காலத்தைக் குறைக்கும் ட்விட்டர்

செலவைக் குறைக்க ட்விட்டரின் புதிய நடவடிக்கை!

எழுதியவர் Prasanna Venkatesh
May 01, 2023
12:55 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கினார் எலான் மஸ்க். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு செலவைக் குறைக்கவும் வருவாயைப் பெருக்கவும் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டார் அவர். ட்விட்டரை நடத்த அதிக ஊழியர்கள் தேவையில்லை என்பது எலானின் கருத்து, எனவே அவர் சிஇஓ-வாக பதவியேற்ற உடனேயே 50% ஊழியர்களை பணிநீக்கம் செய்தார் அவர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு முன்னர் 8,000-ஆக இருந்த ட்விட்டர் நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கை. எலான் மஸ்க் வாங்கிய பிறகு ஆட்குறைப்பு நடவடிக்கைகளின் காரணமாக 1,500-ஆகக் குறைந்தது.

ட்விட்டர்

புதிய நடவடிக்கை: 

எலான் மஸ்க் ட்விட்டரின் சிஇஓ-வாகப் பதவியேற்ற ஊழியர்களுக்காகன சலுகைகளாக இருந்த இலவச மதிய உணவு உள்ளிட்ட சலுகளைகளை நிறுத்தினார். இந்நிலையில், முன்னர் ஊழியர்களுக்கு பேனுதல் விடுப்பாக (Parental Leave) சம்பளத்துடன் கூடிய 4 மாத விடுப்பு வழங்கப்பட்டு வந்தது. தற்போது ட்விட்டர் நிறுவனம் அதனை 2 வாரமாகக் குறைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. எலான் மஸ்க்கின் பல்வேறு செலவு குறைப்பு நடவடிக்கைகளில் ஒன்றாகவே இந்த நடவடிக்கையும் பார்க்கப்படுகிறது. எனினும், ட்விட்டர் நிறுவனம் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் இதுவரை வெளியிடவில்லை.