ட்விட்டரில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் எலான் மஸ்க் - இதுதான் வழியாம்!
ட்விட்டர் கிரியேட்டர் சந்தா திட்டத்தை, எலான் மஸ்க் கையகப்படுத்தியதிலிருந்து தளத்தை மறுசீரமைப்பதன் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டது. டிஜிட்டல் படைப்பாளிகள் தங்கள் உள்ளடக்கத்தை விற்பதன் மூலம் தளத்தை பணமாக்க இது அனுமதிக்கிறது. 136.5 மில்லியன் ஃபாலோயர்கள் கொண்ட மஸ்க் ஆண்டுக்கு, சுமார் $1.2 மில்லியன் சம்பாதிக்கிறார் என ட்விட்டர் பயனர் அலெக்ஸ் கோஹன் என்பவர் பதிவிட்டுள்ளார். பணமாக்குதல் அம்சம் இப்போது அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஆகிய நாடுகளில் உள்ள பயனர்களுக்கு பொருந்தும். இருந்தாலும், இதனை பெற மக்கள் சந்தாதாரர்களாக தேர்வு செய்யலாம். மேல் இடது மூலையில் உள்ள சுயவிவர ஐகானைத் தேர்ந்தெடுத்து, திரையின் கீழே உள்ள தொழில்முறை கருவிகளைத் தட்டவும், பணமாக்குதல் விருப்பத்தைப் பெறவும், சந்தாக்கள் என்பதைக் கிளிக் செய்து பயன்பெறமுடியும்.