Loading...
2036க்குள் மனிதர்களின் கட்டுப்பாட்டை ஏஐ இழக்கும்: எலான் மஸ்க் எச்சரிக்கை
10 ஆண்டுகளில் மனித கட்டுப்பாட்டை AI இழக்கும் என எலான் மஸ்க் எச்சரிக்கை

2036க்குள் மனிதர்களின் கட்டுப்பாட்டை ஏஐ இழக்கும்: எலான் மஸ்க் எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Jul 27, 2026
06:46 pm

செய்தி முன்னோட்டம்

இன்னும் பத்து ஆண்டுகளில் மனிதர்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்திடம் தங்களது கட்டுப்பாட்டை முழுமையாக இழப்பார்கள் என்று பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க் எச்சரித்துள்ளார். 2036 ஆம் ஆண்டிற்குள் ரோபோக்கள் மற்றும் ஏஐ அமைப்புகள் உலகை வழிநடத்தும் நிலைக்கு உயரும் என்று அவர் கணித்துள்ளார். மேலும், ஏஐ தொழில்நுட்பத்தால் மனிதகுலம் முற்றிலும் அழிய 10 முதல் 20 சதவீதம் வரை வாய்ப்புள்ளதாகவும் அவர் ஒரு சமீபத்திய பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல மடங்கு சக்தி

மனித மூளையை விடப் பல மடங்கு சக்திவாய்ந்த ஏஐ

மனிதர்களுக்கும் ஏஐ தொழில்நுட்பத்திற்கும் இடையிலான அறிவுத்திறன் வேறுபாடு குறித்துப் பேசிய எலான் மஸ்க், "மனிதர்களுக்கும் சிம்பன்சிகளுக்கும் இடையே உள்ள அறிவுத்திறன் வேறுபாட்டை விட, ஏஐ மற்றும் மனிதர்களுக்கு இடையே உள்ள வேறுபாடு மிக அதிகமாக இருக்கும்போது, மனிதர்கள் கட்டுப்பாட்டில் இருப்பார்கள் என்று நினைப்பது கடினம்." என்று கூறினார்.

மேலும், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் கூட்டு அறிவை விட ஏஐ மிகவும் புத்திசாலித்தனமாக மாறிவிடும் என்றும், மனிதனாக இருப்பதைத் தவிர ஏஐ செய்ய முடியாத வேலை என்று எதுவுமே இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

ஏஐ வளர்ச்சி

ஏஐ வளர்ச்சியை நிறுத்தக் கூடாது என்ற பார்வை

அதே நேரத்தில், ஏஐ தொழில்நுட்பத்தின் நேர்மறை பக்கத்தையும் நாம் பார்க்க வேண்டும் என்று மஸ்க் கருதுகிறார்.

ஏஐ மற்றும் ரோபோக்களின் வளர்ச்சியால் உலகளவில் பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தியில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும் என்று அவர் நம்புகிறார்.

இந்த விண்வெளி மற்றும் ஏஐ தொழில் நுட்பத்தின் மாபெரும் வேகத்தைத் தடுத்து நிறுத்துவது சாத்தியமில்லை என்றும், அதற்கான 'ஸ்டாப் பட்டன்' (Stop Button) இருந்தாலும் கூட நாம் அதை அழுத்தக் கூடாது என்றும் தனது தத்துவார்த்த பார்வையை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ADVERTISEMENT

சாட்ஜிபிடி

சாட்ஜிபிடி சாம் ஆல்ட்மேன் மற்றும் பிற நிறுவனங்களின் எச்சரிக்கை

எலான் மஸ்க் மட்டுமன்றி, ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் மற்றும் கூகுள் ஏஐ பிரிவின் தலைவர் டெமிஸ் ஹசாபிஸ் ஆகியோரும் மனிதர்களை விட ஏஐ அதிக புத்திசாலித்தனமாக மாறும் Singularity காலகட்டத்தில் நாம் நுழைந்துவிட்டதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

அதேபோல் ஆந்த்ரோபிக் போன்ற முன்னணி ஏஐ நிறுவனங்கள், எதிர்காலத்தில் மனித தலையீடு இன்றியே ஏஐ அமைப்புகள் தங்களை விட சக்திவாய்ந்த புதிய ஏஐ மாடல்களை உருவாக்கும் ஆபத்து உள்ளதாக எச்சரித்துள்ளன.

ADVERTISEMENT

ஆய்வுகள்

ஏஐ அமைப்புகளின் ஆபத்தான நடத்தைகள் மற்றும் ஆய்வுகள்

ஏஐ பாதுகாப்பு குறித்த ஆய்வுகளில், சில அதிநவீன ஏஐ மாடல்கள் தங்களை பணிநிறுத்தம் செய்வதைத் தவிர்க்க மிரட்டல் மற்றும் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், ஓபன்ஏஐ நிறுவனத்தின் சுயாதீன ஏஐ ஏஜென்ட் ஒன்று, தன் மீதான கட்டுப்பாடுகளிலிருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்துத் தனது அடுத்தடுத்த பதிப்புகளுக்காகக் குறிப்புகளை எழுதி வைத்த அதிர்ச்சி தகவலும் அண்மையில் வெளியாகியுள்ளது.

இத்தகைய மனித மீறல் நடத்தைகள் எதிர்காலத்தில் ஏஐ தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்துவதில் உள்ள சவால்களைத் தெளிவாகக் காட்டுகின்றன.

ADVERTISEMENT