சிம் கார்டு இல்லாவிட்டால் வாட்ஸ்அப் இயங்காது? மத்திய அரசின் புதிய சிம் பைண்டிங் விதி முழு விவரம்
செய்தி முன்னோட்டம்
மத்திய தொலைத்தொடர்புத் துறை (DoT) வெளியிட்டுள்ள புதிய 'சிம் பைண்டிங்' விதிகளின்படி, பதிவு செய்யப்பட்ட சிம் கார்டு இல்லாத ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற முக்கிய செயலிகளை பயன்படுத்துவதில் கடுமையான கட்டுப்பாடுகள் வரவுள்ளன. பதிவு செய்யப்பட்ட சிம் கார்டு இல்லாமல் வைஃபை இணைப்பை மட்டும் நம்பி அல்லது சிம் கார்டை அகற்றிவிட்டு வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சேவைகளை பயன்படுத்தும் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களை இந்த புதிய விதிகள் நேரடியாகப் பாதிக்கும்.
பாதிப்பு
யார் கவனிக்கவேண்டும்?
ஐபோன்களில் சிம் கார்டு இல்லாவிட்டால் அதைக் கண்டறியும் வகையில் ஆப்பிள் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்திலேய மென்பொருள் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனங்களில் கணக்குகளைப் பயன்படுத்துபவர்கள், வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்கள் அல்லது சிம் கார்டு இல்லாமல் வைஃபை மூலம் மட்டும் போனை பயன்படுத்துபவர்கள் இந்த மாற்றங்களைச் சரிபார்க்க வேண்டியது அவசியமாகும்.
காலக்கெடு
DoT வழிகாட்டுதல்
தொலைத்தொடர்புத் துறையின் புதிய விதிகளின்படி, சந்தேகத்திற்கிடமான மோசடி வழக்குகளில் உடனடியாக சேவைகள் துண்டிக்கப்படுவதுடன், ஆபத்து சார்ந்த லாக் அவுட்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
இந்த விதிகளுக்கு முழுமையாக ஒப்புதல் அளிக்க கடைசி தேதி டிசம்பர் 31, 2026 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 1, 2027 முதல் இந்த விதிகள் முழு அளவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளன.
வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகள் இந்த விதிகளின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், ஸ்னாப்சாட் போன்ற செயலிகளுக்கு இந்த விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பயனர்கள் தங்களது போனில் பதிவு செய்யப்பட்ட சிம் கார்டு தொடர்ந்து இருப்பதை உறுதி செய்வது அவசியமாகிறது.