NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / IT செயலிலழப்பிற்கு பரிகாரமாக $10 கிஃபிட் கூப்பன்களுடன் மன்னிப்பு கோரிய CrowdStrike நிறுவனம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    IT செயலிலழப்பிற்கு பரிகாரமாக $10 கிஃபிட் கூப்பன்களுடன் மன்னிப்பு கோரிய CrowdStrike நிறுவனம்
    வருத்தத்தின் அடையாளமாக $10 Uber Eats கிஃபிட் கூப்பனையும் வழங்குகிறது

    IT செயலிலழப்பிற்கு பரிகாரமாக $10 கிஃபிட் கூப்பன்களுடன் மன்னிப்பு கோரிய CrowdStrike நிறுவனம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 25, 2024
    12:08 pm

    செய்தி முன்னோட்டம்

    CrowdStrike எனும் சைபர் செக்யூரிட்டி நிறுவனமானது, கடந்த வாரம் உலகளவில் மில்லியன் கணக்கான கணினிகளை செயலிழக்கச் செய்த ஒரு தவறான புதுப்பிப்புக்காக அதன் கூட்டாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

    நிறுவனம் தங்கள் வருத்தத்தின் அடையாளமாக $10 Uber Eats கிஃபிட் கூப்பனையும் வழங்குகிறது.

    "ஜூலை 19 சம்பவம் ஏற்படுத்திய கூடுதல் பணியை" அங்கீகரிக்கும் மின்னஞ்சல் CrowdStrike இன் தலைமை வணிக அதிகாரி டேனியல் பெர்னார்ட் மூலம் அனுப்பப்பட்டது.

    மின்னஞ்சலில் "எங்கள் நன்றியைத் தெரிவிக்க, உங்கள் அடுத்த கப் காபி அல்லது இரவு நேர சிற்றுண்டி எங்களுடையது!" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    உலகளாவிய தாக்கம்

    தவறான புதுப்பிப்பு மில்லியன் கணக்கான விண்டோஸ் சாதனங்களை முடக்கியது

    ஜூலை 19 அன்று, CrowdStrike-ஆல் வெளியிடப்பட்ட தவறான புதுப்பிப்பு, சுமார் 8.5 மில்லியன் விண்டோஸ் சாதனங்களைப் பயன்படுத்த முடியாததாக ஆக்கியது.

    இதனால் பயனர்கள் எச்சரிக்கை வாசகம் கொண்ட ப்ளூ ஸ்க்ரீனை (BSOD) உடன் போராடி வந்தனர்.

    இந்த சம்பவத்தால் துபாய், லண்டன், இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ள விமான நிலையங்களில் குறிப்பிடத்தக்க தாமதம் ஏற்பட்டது.

    இந்த கோளாறு காரணமாக பல மருத்துவமனைகள் அறுவை சிகிச்சைகளை நிறுத்த வேண்டியிருந்தது மற்றும் உலகளவில் பல வணிகங்கள் முடங்கின.

    பகிரங்க மன்னிப்பு

    CrowdStrike நிர்வாகிகள் இந்த சம்பவத்திற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டனர்

    CrowdStrike CEO ஜார்ஜ் கர்ட்ஸ் மற்றும் தலைமை பாதுகாப்பு அதிகாரி ஷான் ஹென்றி இந்த சம்பவத்திற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளனர்.

    சம்பவத்தைத் தீர்ப்பதிலும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுப்பதிலும் முழு வெளிப்படைத்தன்மையை வாடிக்கையாளர்களுக்கும் கூட்டாளர்களுக்கும் குர்ட்ஸ் உறுதியளித்தார்.

    LinkedIn இல்,"நாங்கள் உங்களைத் தவறவிட்டோம், அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்" என ஹென்றி நிலைமை குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார்.

    Redemption பிரச்சினை

    Uber Eats கிஃப்ட் கார்டு ரிடீம் சிக்கல் மற்றும் அரசியல் ஆய்வு

    Uber Eats கிஃப்ட் கார்டு வவுச்சரை ரிடீம் செய்ய முயற்சித்தபோது, ​​அது ரத்துசெய்யப்பட்டதாக சில கூட்டாளர்கள் எர்ரர் மெசஜை எதிர்கொண்டுள்ளனர்.

    CrowdStrike செய்தித் தொடர்பாளர் கெவின் பெனாச்சி, அதிக பயன்பாட்டு விகிதங்கள் காரணமாக Uber அதை மோசடி என்று கொடியிட்டதை உறுதிப்படுத்தினார்.

    செயலிழப்பினால் ஏற்பட்ட வீழ்ச்சியைக் கையாள்வதோடு, CrowdStrike அரசியல் ஆய்வையும் எதிர்கொள்கிறது.

    CEO ஜார்ஜ் கர்ட்ஸ் ஹவுஸ் ஹோம்லேண்ட் செக்யூரிட்டி கமிட்டி முன் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டார்.

    செயலிழப்பு காரணம்

    CrowdStrike புதுப்பித்தலில் ஏற்பட்ட பிழை காரணமாக செயலிழப்பு

    CrowdStrike ஆனது " சிக்கலான தரவு " கொண்ட புதுப்பித்தலில் ஏற்பட்ட பிழை தான் உலகளாவிய IT செயலிழப்பிற்கு காரணம் என்று கூறியது.

    வெகுஜன செயலிழப்புக்கான காரணத்தை கண்டறியும் முயற்சிகள் குறித்த புதுப்பிப்புகளை நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

    தொடர்ந்து சவால்களை எதிர்கொண்ட போதிலும், CrowdStrike இது ஒரு பாதுகாப்பு அல்லது இணைய சம்பவம் அல்ல, ஆனால் Windows Hostsக்கான Falcon உள்ளடக்க புதுப்பித்தலில் உள்ள சிக்கல் என்று கூறுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    உபர்

    சமீபத்திய

    நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் நடிகை இவர்தான்! இணையத்தில் வைரலாகும் தகவல் விஷால்
    அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க கொள்கைகளை மறுசீரமைக்க மத்திய அரசு ஆலோசனை  அணுசக்தி
    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்
    கவாசாகி எலிமினேட்டருக்கு போட்டியாக ரெபெல் 500 க்ரூஸரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா ஹோண்டா

    தொழில்நுட்பம்

    பயன்பாட்டில் இல்லாத யுபிஐ ஐடிக்களை முடக்கவிருக்கும் NPCI யுபிஐ
    இன்று முதல் சிம் கார்டுகளை வாங்குவதற்கு முழுமையான டிஜிட்டல் KYC அமல்  இந்தியா
    டிண்டர் போலவே, லெப்ட்-ஸ்வைப் அம்சத்தை அறிமுகப்படுத்துயுள்ளது ஸ்லாக் மொபைல்  தொழில்நுட்பம்
    6 மாதங்களில் 40 AI மாடல்களுக்கு அங்கீகாரம்: ChatGPTக்கு போட்டியாக சீனாவின் நடவடிக்கை சீனா

    தொழில்நுட்பம்

    முதன்முறையாக மனித மூளைக்கு சிப்பை பொருத்தி எலான் மஸ்க்கின் நியூராலிங்க் சாதனை எலான் மஸ்க்
    H-1 பி விசா உள்நாட்டு புதுப்பித்தல் திட்டம் அறிமுகம்; ஏப்ரல் 1 வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும் விசா
    மேம்படுத்தப்பட்ட மெசேஜிங் சேவைக்காக புதிய வடிவமைப்பு விருப்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது வாட்ஸப்  வாட்ஸ்அப்
    STEAG: புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த இராணுவத்தில் சிறப்பு பிரிவு அறிமுகம்  இந்திய ராணுவம்

    உபர்

    அலுவலகம் செல்பவர்களுக்காக விரைவில் ஊபர் பஸ் சேவை முதலீடு
    வெளியூர் பயணங்களுக்கும் 'Round Trip' வசதியை அறிமுகப்படுத்திய ஊபர் தொழில்நுட்பம்
    ஸ்விக்கி, ஊபர் உள்ளிட்ட இணையவழி ஊழியர்களுக்கு தனி நலவாரியம் - தமிழ்நாடு அரசு  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025