24 மாதங்களில் 98% கோடிங் மாற்றம்; 27 வயது இந்திய வம்சாவளி இளைஞருக்கு அன்லிமிடெட் ஏஐ டோக்கன் தந்த சிஸ்கோ
செய்தி முன்னோட்டம்
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சிஸ்கோ, தனது பல ஆண்டுகால பழைய மென்பொருள் கோடிங்கில் 98 சதவீதத்தை அடுத்த 24 மாதங்களுக்குள் முற்றிலும் மறுசீரமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த மிக முக்கியமான திட்டத்தை வழிநடத்தும் பொறுப்பை பத்மநாபன் கிருஷ்ணமூர்த்தி என்ற 27 வயது ஜென் ஜி ஊழியரிடம் சிஸ்கோ தலைவர் ஜீத்து படேல் ஒப்படைத்துள்ளார். இந்த திட்டத்திற்குத் தேவையான அளவு வரம்பற்ற ஏஐ டோக்கன்களைப் பயன்படுத்திக் கொள்ள அவருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.
சவால்
வெறும் இரண்டே பேரில் சாதித்துக் காட்டுவதாக சவால்
முன்னதாக 2023-இல் EzDubs என்ற லைவ் மொழிபெயர்ப்பு ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கிய பத்மநாபன், 2025-இல் அந்நிறுவனத்தை சிஸ்கோ கையகப்படுத்திய போது நிறுவனத்தில் இணைந்தார்.
சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்தில் ஜீத்து படேலை சந்தித்த அவர், தனது இரண்டு பேர் கொண்ட சிறிய குழுவைக் கொண்டு சிஸ்கோவின் ஒட்டுமொத்த லெகசி கோடிங்கையும் ஏஐ உதவியுடன் மாற்றியமைக்க முடியும் என சவால் விடுத்தார்.
இந்த அசாதாரணமான அணுகுமுறையைக் கண்டு ஈர்க்கப்பட்ட ஜீத்து படேல், இத்திட்டத்திற்கு உடனடியாகப் பச்சைக்கொடி காட்டினார்.
இளம் தலைமுறை
பாரம்பரிய சிந்தனைகளை மாற்றும் இளம் தலைமுறையின் புதுமை
மூத்த பொறியாளர்கள் பல ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் பணிகளை, இளம் தலைமுறை ஊழியர்கள் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மிக விரைவாக முடித்துக்காட்டுகின்றனர் என ஜீத்து படேல் தெரிவித்துள்ளார்.
பழைய நடைமுறைகளையே பின்பற்றி பழகிப்போன மூத்த ஊழியர்களை விட, புதுமையான கேள்விகளையும் சிந்தனைகளையும் முன்வைக்கும் இளம் திறமையாளர்களுக்கு சிஸ்கோ முன்னுரிமை அளிக்கிறது.
இதன் மூலம் நிறுவனத்தில் ஆரோக்கியமான விவாதங்களும், புதிய தொழில்நுட்பப் புரட்சிகளும் உருவாகும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.