இவர்களையும் விட்டுவைக்காத சீனா! ChatGPT, கூகுளுக்கு இணையாக போட்டி
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சாட்ஜிபிடி செயற்கை நுண்ணறிவு பெரியளவில் வளர்ந்துவிட்டது. நாம் கூகுளில் எந்த விஷயத்தை தேடினாலும், பதில் கிடைக்கும் என்பது தெரிந்தது தான். கூகுளுக்கு போட்டியாக வந்த இந்த சாட்ஜிபிடியை முறியடிக்க பலவிதமான செயற்கை நுண்ணறிவு தளங்களை கூகுள் அறிமுகப்படுத்தி வருகிறது. இது மட்டுமின்றி பல நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவை கையில் எடுத்துள்ளனர். சீனாவுக்கும் இந்த தகவல் பரவிய நிலையில், அவர்களும் புதுவிதமான செயற்கை நுண்ணறிவை வழங்க செயல்பட ஆரம்பித்துள்ளனர். சீனாவின் பைடு மற்றும் அலிபாபா போன்ற சீன தொழில்நுட்ப ஜாம்பவான்கள் மற்றும் சிறிய ஸ்டார்ட்-அப்கள் பல ஆண்டுகளாக AI திட்டங்களில் வேலை செய்து வருகின்றன. சீனாவில் உள்ள பைடு, குன்லூன் டெக் போன்ற Chatbots பெரும்பாலும் சமூக தொடர்புகளில் கவனம் செலுத்துகின்றன.
சாட்ஜிபிடி கூகுளுக்கு போட்டியாக சீனாவின் AI தொழில்நுட்பங்கள்
இன்ஸ்பர் எலக்ட்ரானிக் தகவல் தொழில், 360 செக்யூரிட்டி டெக்னாலஜி INC, NETEEASE, JD.COM, TENCENT, அலிபாபா போன்றவைகள் செயல்படுகின்றன. பைடு Baidu Inc பிப்ரவரி 7 அன்று, "Ernie Bot" எனப்படும் ChatGPT-பாணி திட்டத்தின் உள் சோதனையை மார்ச் மாதத்தில் முடிப்பதாக அறிவித்தது. அலிபாபா பிப்ரவரி 8 அன்று அலிபாபா குழுமம், தற்போது உள்ளக சோதனையில் உள்ள ChatGPT-பாணிக் கருவியை உருவாக்கி வருவதாகக் கூறியது. TENCENT டென்சென்ட் ஹோல்டிங்ஸ் பிப்ரவரி 9 அன்று, ChatGPT-கருவி தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டு வருவதாகவும், அடித்தள மாதிரி, இயந்திர கற்றல் வழிமுறைகள் மற்றும் இயற்கை மொழி செயலாக்கம் ஆகியவற்றில் அதன் தற்போதைய தொழில்நுட்ப இருப்புகளின் அடிப்படையில் AI ஆராய்ச்சியில் நிறுவனம் தொடர்ந்து முதலீடு செய்கிறது.