சென்னை மெட்ரோ ரயில் இன்று முதல் வாட்ஸ்அப் இ-டிக்கெட்டுகளை அறிமுகப்படுத்துகிறது!
செய்தி முன்னோட்டம்
சென்னை மெட்ரோ ரயில், பயணிகளுக்கு தங்கள் டிக்கெட்டுகளைப் வாட்ஸ்அப் மூலம் பெறுவதற்கான செயல்முறையைத் தொடங்கியுள்ளது.
இதில் டெபிட், கிரெடிட் கார்டுகள் மற்றும் கூகுள் பே உட்பட பல கட்டண விருப்பங்களை பயன்படுத்தி எளிதில் பெற்றுக்கொள்ளலாம்.
இன்று முதல் சென்னை மெட்ரோ பயணிகள் தங்களது டிக்கெட்டுகளை வாட்ஸ்அப் மூலம் பெறலாம்.
நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டுகளை அறிமுகப்படுத்திய 2 மாதங்களுக்குப் பிறகு, சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் வாட்ஸ்அப் அடிப்படையிலான இ-டிக்கெட்டுகளை வழங்கத் தொடங்குகிறது.
CMRL அதிகாரிகளின் கூற்றுப்படி, மெட்ரோ நிர்வாகம் கொடுக்கவுள்ள மொபைல் நம்பருக்கு எங்கிருந்து எங்கே செல்கிறீர்கள் என்ற விவரத்தை அனுப்பி டெபிட் , கிரெடிட் கார்டுகள் அல்லது கூகுள் பே போன்ற விருப்பங்களை பயன்படுத்தி பணம் செலுத்தலாம் என கூறியுள்ளது.
Metro
மெட்ரோ ரயில் சேவை
மெட்ரோ ரயில் சேவைகள் முதலில் தொடங்கியபோது, டோக்கன்களும் ஸ்மார்ட் கார்டுகளும் டிக்கெட்டுகளின் முக்கிய முறைகளாக இருந்தன.
தொடக்கத்தில் பயணிகள் பெரும்பாலும் டோக்கன்களுடன் சென்றாலும், தற்போது பலரும் ஸ்மார்ட் கார்டுகளுக்கு மாறியுள்ளனர்.
ஏப்ரல் மாதத்தில் 66.85 லட்சம் பயணிகளில், 3.5 லட்சம் பேர் டோக்கன்களையும், 39.8 லட்சம் பேர் ஸ்மார்ட் கார்டுகளையும் பயன்படுத்தினர்.
CMRL சமீபத்தில் QR குறியீடு டிக்கெட் முறையை அறிமுகப்படுத்தியது.
QR குறியீடு டிக்கெட்டுகளைத் தவிர, இந்த வாட்ஸ்அப் அடிப்படையிலான இ-டிக்கெட்டுகள் ஒரு முறை பயணிப்பவர்களுக்கு, ரயில் அல்லது விமானத்தைப் பிடிக்கச் செல்பவர்களுக்கு உதவக்கூடும், ஏனெனில் அவர்கள் டிக்கெட் வாங்க வரிசையில் நிற்க வேண்டியதில்லை.
தங்கள் கார்டுகளை ரீசார்ஜ் செய்ய நேரமில்லாத பயணிகள் கூட வாட்ஸ்அப் டிக்கெட்டை விரைவாக வாங்கி பயணிக்கலாம்.