'சென்னை CEO பசங்க': பாரிஸில் சந்தித்து கொண்ட சுந்தர் பிச்சை மற்றும் அரவிந்த் ஸ்ரீனிவாஸ்
செய்தி முன்னோட்டம்
கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை செவ்வாயன்று பாரிஸில் பெர்ப்ளெக்ஸிட்டி AI இணை நிறுவனர் அரவிந்த் ஸ்ரீனிவாஸை சந்தித்தார்.
இரண்டு உயர்மட்ட இந்திய வம்சாவளி தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு சமூக ஊடங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
இருவரும் சென்னையை சேர்ந்தவர்கள் என இணையவாசிகள் சிலாகித்தாலும், கூகிள் ஸ்ரீனிவாஸின் ஸ்டார்ட்அப்-ஐ வாங்க திட்டமிட்டுள்ளதா என்றும் ஒரு சிலர் சந்தேகிக்கின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இணைந்து தலைமை தாங்கிய பாரிஸில் நடந்த AI அதிரடி உச்சி மாநாட்டில் பிச்சை மற்றும் ஸ்ரீனிவாஸ் இருவரும் கலந்து கொண்டனர் .
ஒற்றுமை
இருவருக்குள்ளும் இருக்கும் ஒற்றுமை
கூகிளின் சுந்தர் பிச்சை மதுரையில் பிறந்து தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை சென்னையில் கழித்தார்.
அதே நேரத்தில் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தனது வேர்களை சென்னையில் கொண்டிருந்தார். சுந்தர் பிச்சை மற்றும் ஸ்ரீனிவாஸ் இருவரும் IIT மாணவர்கள்.
இவர்கள் சந்தித்துக்கொண்ட புகைப்படத்தை அரவிந்த் ஸ்ரீனிவாஸ் பகிர்ந்துகொண்டதும், "சென்னை சிறுவர்கள் AI உலகை ஆளுகின்றனர்," என்று ஒரு X பயனர் எழுதினார்.
இன்னொருவர்,"ChennAI Express." என எழுதியிருந்தார்.
X பயனர் ஆனந்த் என்பவர், "சென்னையைச் சேர்ந்த இரண்டு பேர் மட்டுமே உலகம் முழுவதும் தேடலில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்." என குறிப்பிட்டு இருந்தார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Great meeting you @sundarpichai pic.twitter.com/Z0yzYhsHgd
— Aravind Srinivas (@AravSrinivas) February 11, 2025