அட்சய திருதியை எதிரொலி - தங்கம் விலை உயர்வு! விலை விபரம்
செய்தி முன்னோட்டம்
தங்கம் விலை உயர்வுக்கு பல காரணங்கள் இருந்தாலும், அமெரிக்க வங்கிகள் திவால் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது.
இதனால் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதுமட்டுமின்றி, அன்றாடம் தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தை கண்டாலும், ஒரு சில நாட்களில் அதிரடியாக சரிவதும் உண்டு.
இந்த நிலையில், அட்சய திருதியை நெருங்கி விட்டதால் தங்கம் விலை அதிரடியான மாற்றங்கள் உண்டாகிறது.
தங்கம் விலை
தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்துள்ளது- இன்றைய நிலவரம்
அதன் படி இன்றைய நாள் ஏப்ரல் 21 ஆம் தேதி படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து 5,665 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ.45,320 ஆகவும் விற்பனையாகிறது.
அதுவே, 18 காரட் ஆபரணத் தங்கத்தின் படி 12 ரூபாய் உயர்ந்து 4,640 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
சவரனுக்கு 96 ரூபாய் ஆகவும் உயர்ந்து ரூ.37,120 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலையை பொறுத்த வரையில் கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ஆனது ரூ.81.30 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.81,300 எனவும் விற்பனையாகிறது.