Page Loader
மளமளவென உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள்
தங்கம் விலையானது மார்ச் 30-இல் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது.

மளமளவென உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள்

எழுதியவர் Siranjeevi
Mar 30, 2023
12:51 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது. அன்றாடம் தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தை கண்டாலும், ஒரு சில நாட்களில் அதிரடியாக சரிவதும் உண்டு. பட்ஜெட் தாக்கலுக்கு பின் தங்கம் விலை பல மாற்றங்கள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் சரியவில்லை. இந்நிலையில், இன்றைய நாள் மார்ச் 30 ஆம் தேதி படி 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.20 உயர்ந்து 5,565 ரூபாய் ஆக விற்பனையாகிறது. அதுவே, சவரன் ஒன்றுக்கு ரூ.160 வரை உயர்ந்து ரூ.44,520 ஆகவும் விற்பனையாகிறது. 18 கிராம் அபரண தங்கம் கிராமுக்கு 17 ரூபாய் உயர்ந்து 4,559 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.136 வரை உயர்ந்து ரூ.36,472 ஆகவும் விற்பனையாகிறது.

தங்கம் விலை

தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைவு - இன்றைய நிலவரம்

வெள்ளியின் விலை மேலும், ஒரு கிராம் வெள்ளி விலையும் 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.20 ஆகவும், கிலோ ஒன்றிற்கு ரூ.76,200 எனவும் விற்பனையாகி வருகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. அதுமட்டுமின்றி, மத்திய தங்க பத்திர மூதலீடு திட்டத்தை கொண்டுவந்துள்ள போதிலும், தங்கம் விற்பனையாவது குறையவில்லை என்பதே உண்மை. தங்கத்தின் மீது செய்யப்படும் முதலீடுகளுக்கு தக்க லாபம் கிடைத்து வருகிறது. இதைத்தவிர, பொதுவாக குடும்பங்களில் தங்க ஆபரணங்கள் தலைமுறை தலைமுறையாக கைமாறி கொண்டே இருக்கும். அதனால் தான், குடும்பத்தில் தங்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் அளிக்கப்பட்டு வருகிறது.