Loading...
பயனர்களுக்காக ஏஐ ஏஜென்ட்கள் பணம் செலுத்தும் ChatGPT Wallet அறிமுகம்; தவறு நடந்தால் யார் பொறுப்பு?
பயனர்களுக்காக பணம் செலுத்தும் ChatGPT Wallet அறிமுகம்

பயனர்களுக்காக ஏஐ ஏஜென்ட்கள் பணம் செலுத்தும் ChatGPT Wallet அறிமுகம்; தவறு நடந்தால் யார் பொறுப்பு?

எழுதியவர் Sekar Chinnappan
Nov 15, 2026
05:14 pm

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் ஓபன்ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடி வாலட் (ChatGPT Wallet) என்ற புதிய கட்டண வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், மாஸ்டர்கார்டு மற்றும் விசா ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த சேவை, பயனர்களின் சார்பாக ஏஐ ஏஜென்ட்கள் பொருட்களைத் தேடி, விலைகளை ஒப்பிட்டு பணம் செலுத்த உதவுகிறது. பயனர்களின் உண்மையான கார்டு விவரங்களை பகிராமலேயே பாதுகாப்பான பரிவர்த்தனைகளை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.

பயோமெட்ரிக் பாதுகாப்பு

பேமெண்ட் டோக்கன்கள் மற்றும் பயோமெட்ரிக் பாதுகாப்பு மூலம் செயல்படும் விதம்

சாட்ஜிபிடி வாலட்டில் பயனர்கள் தங்களது கார்டை ஒருமுறை இணைத்தாலே போதும்.

ஏஐ ஏஜென்ட் ஒரு பொருளைத் தேர்ந்தெடுத்தவுடன் அதன் விலை மற்றும் விவரங்களை பயனர் சரிபார்க்க வேண்டும்.

பின்னர் ஃபேஸ் ஐடி அல்லது கைரேகை மூலம் பயனர் ஒப்புதல் அளித்தவுடன், கார்டு நெட்வொர்க் ஒரு தற்காலிக பேமெண்ட் டோக்கனை உருவாக்கும்.

இதன் மூலம் பயனரின் உண்மையான கார்டு எண் வணிகருக்கோ அல்லது ஏஐ ஏஜென்ட்டிற்கோ தெரியாமலேயே கட்டணம் செலுத்தப்படும்.

தவறு நடந்தால் யார் பொறுப்பு?

பரிவர்த்தனையில் தவறு நடந்தால் யார் பொறுப்பு மற்றும் கார்டு பாதுகாப்பு விதிகள்

இந்த சேவையின் கீழ் பயனர்கள் நேரடியாக வணிகர்களுடனேயே பரிவர்த்தனை செய்வதால், பொருட்களின் விலை, டெலிவரி மற்றும் திரும்ப பெறுதல் ஆகியவற்றிற்கு வணிகர்களே பொறுப்பாவார்கள்.

வாங்கிய பொருள் பழுதடைந்திருந்தாலோ அல்லது பரிவர்த்தனையில் சர்ச்சை ஏற்பட்டாலோ, பயனர்கள் தங்களது கிரெடிட் கார்டு வழங்கும் வழக்கமான பாதுகாப்பு மற்றும் ரிவார்டுகளைத் தொடர்ந்து பெற முடியும்.

ஆனால் ஏஐ ஏஜென்ட் மேற்கொள்ளும் தவறுகளுக்கு தானாக இழப்பீடு வழங்கும் பொதுவான பொறுப்புத் திட்டத்தை ஓபன்ஏஐ அறிவிக்கவில்லை.

ADVERTISEMENT

முதற்கட்ட வெளியீடு

அமெரிக்க Pro சந்தாதாரர்களுக்கு முதற்கட்ட வெளியீடும் எதிர்காலத் திட்டங்களும்

தற்போதைய முதற்கட்ட வெளியீட்டில் பயனரின் நேரடி ஒப்புதல் இல்லாமல் ஏஐ ஏஜென்ட்கள் தன்னிச்சையாக பணம் செலுத்த முடியாது.

ஆனால் எதிர்காலத்தில் செலவு வரம்பு, குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் கால அளவு ஆகிய நிபந்தனைகளை நிர்ணயித்து முழுமையாக ஏஜென்ட்களிடம் பொறுப்பை ஒப்படைக்கும் வசதியை ஓபன்ஏஐ கொண்டு வரவுள்ளது.

தற்போது அமெரிக்காவில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட ChatGPT Pro சந்தாதாரர்களுக்கு மட்டுமே டாட்ஸ் (dots) தளம் வழியாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT