
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணை நோக்கி சீறி பாய்ந்தது சந்திரயான்-3
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் பெருமையாக கருதப்படும் சந்திரயான் 3 இன்று மதியம் சரியாக 2:35 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
சீறி பாய்ந்த அந்த ராக்கெட்டை பார்க்க ஏராளமான பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் குழுமி இருந்தனர்.
சந்திரயான் விண்ணில் ஏவப்படுவதற்கு முன்னர் இஸ்ரோவின் தலைவர் ஸோமன்த் கட்டுப்பாடு அறைக்கு வந்தார்.
இன்று விண்ணில் ஏவப்படும் இந்த விண்கலம், 40 நாட்களில் சந்திரனின் நிலப்பரப்பை அடையும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்கலம் 3.84 லட்சம் கி.மீ பயணப்பட்டு, சந்திரனை அடையும். அமெரிக்கா, ரஷ்யா, சீனா என்ற இந்த 3 வல்லரசுகளை அடுத்து நிலவை தொடவிருக்கும் முதல் நாடு இந்தியா. இந்த பெருமைமிகு கணத்திற்காக இந்திய தலைவர்கள் மட்டுமின்றி பல வெளிநாட்டு தலைவர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.
ட்விட்டர் அஞ்சல்
விண்ணை நோக்கி சீறி பாய்ந்தது சந்திரயான் 3
Hum chale chaand parr🇮🇳🇮🇳
— Anu Gupta #IAmSushant 🇮🇳 (@Iamanugupta1) July 14, 2023
Congratulations @isro and all the scientists for this historic moment.#Vandermataram #Chandrayaan3 https://t.co/zpW50t5kkL