Page Loader
நிலவிற்கு மிக அருகில் சென்ற சந்திரயான் 3, ட்வீட் செய்த இஸ்ரோ
நிலவிற்கு மிக அருகில் சென்ற சந்திரயான் 3

நிலவிற்கு மிக அருகில் சென்ற சந்திரயான் 3, ட்வீட் செய்த இஸ்ரோ

எழுதியவர் Prasanna Venkatesh
Aug 14, 2023
01:23 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் தெலுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலமானது தற்போது நிலவை சுற்றி வந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி இஸ்ரோ மேற்கொண்ட சுற்றுவட்டப்பாதை உயரக்குறைப்பு நடவடிக்கையின் மூலம், நிலவில் இருந்து 1437கிமீ தூர சுற்றுவட்டப்பாதையில் நிலவைச் சுற்றி வந்து கொண்டிருந்தது சந்திரயான் 3. இன்று அந்த உயரத்தை மேலும் குறைத்திருக்கிறது இஸ்ரோ. இன்று அந்நிறுவனம் மேற்கொண்ட 'Orbit circularisation phase' நடவடிக்கையின் மூலம், நிலவுக்கு மிக அருகில் 177கிமீ சுற்றுவட்டப்பாதையில் நிலவைச் சுற்றிவரத் தொடங்கியிருக்கிறது சந்திரயான்-3. இந்த நடவடிக்கையானது இன்று நண்பகல் 11.30 மணியிலிருந்து 12.30 மணிக்குள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அடுத்த நடவடிக்கையானது, ஆகஸ்ட் 16 அன்று, காலை 8.30 மணிக்கு மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் ட்வீட் செய்திருக்கிறது இஸ்ரோ.

ட்விட்டர் அஞ்சல்

இஸ்ரோவின் எக்ஸ் பதிவு: