சந்திரயான் 3: புதிய வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ
கடந்த புதன்கிழமை, சந்திரயான்-3 திட்டத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. இதற்கு பல நாடுகளிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் வலம் வருவது போன்ற புதிய ஒரு வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. விக்ரம் லேண்டர் என்பது நிலவில் தரையிறக்குவதற்காக பயன்படுத்தப்பட்ட ஒரு கலமாகும். அதேநேரம், பிரக்யான் ரோவர் என்பது நிலவின் மேற்பரப்பில் ஆராய்ச்சிகளை நடத்த அனுப்பப்பட்ட இயந்திரமாகும். பிரக்யான் ரோவர் முதன்முதலில் நிலவின் மேற்பரப்பை தொடும் வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், பிரக்யான் ரோவரின் புதிய வீடியோ ஒன்றை இன்று ட்விட்டரில் பகிர்ந்திருக்கும் இஸ்ரோ, "பிரக்யான் ரோவர் நிலவின் தென் துருவத்தில் சந்திர ரகசியங்களைத் தேடி சுற்றி வருகிறது." என்று கூறியுள்ளது.