Zoom பயன்படுத்துபவரா நீங்கள்? ஹேக் செய்யப்பட வாய்ப்புள்ளதாம்: இந்திய அரசு எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
இந்திய கணினி அவசரக்கால பதிலடிக்குழு (CERT-In), ஸூம் (Zoom) மென்பொருளில் கண்டறியப்பட்டுள்ள மிக ஆபத்தான பாதுகாப்பு குறைபாடு குறித்து பிப்ரவரி 2, 2026 அன்று அதிகாரப்பூர்வ எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தக் குறைபாடானது 10-க்கு 9.9 என்ற மிக அதிகப்படியான பாதுகாப்பு அபாயப் புள்ளியைப் (CVSS Score) பெற்றுள்ளது. இதன் மூலம், ஹேக்கர்கள் உலகின் எந்த பகுதியிலிருந்தும் உங்கள் சாதனத்திற்கு தீங்கிழைக்கும் கட்டளைகளை அனுப்பி, அதை முழுமையாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும். குறிப்பாக, ஒரு Meeting பங்கேற்கும் நபர், இந்த குறைபாபாடை பயன்படுத்தி நிறுவனத்தின் ஒட்டுமொத்த பின்னணி அமைப்பையும் (Backend System) முடக்கவோ அல்லது தரவுகளை திருடவோ வாய்ப்புள்ளது.
பாதிப்பு
இந்த குறைபாடு முக்கியமாக யாரை பாதிக்கும்?
பெரிய நிறுவனங்கள் அல்லது Hybrid மீட்டிங் அமைப்புகளில் பயன்படுத்தப்படும் Zoom Node Multimedia Router மென்பொருள்களையே இது அதிகம் பாதிக்கிறது. குறிப்பாக, 5.2.1716.0 பதிப்பிற்கு முந்தைய பழைய மென்பொருள்களை பயன்படுத்தும் நிறுவனங்கள் இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயத்தில் உள்ளன. சாதாரண தனிநபர் பயனர்களை இது நேரடியாகப் பாதிக்காது என்றாலும், நிறுவனங்களின் தகவல் தொழில்நுட்ப (IT) குழுக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தீர்வு
மத்திய அரசு வழங்கும் தீர்வு என்ன?
இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க, zoom பயனர்கள் மற்றும் நிறுவன நிர்வாகிகள் உடனடியாக தங்களது மென்பொருளைப் புதிய பதிப்பிற்கு Version 5.2.1716.0 அல்லது அதற்கு மேற்பட்டவை மேம்படுத்துமாறு (Update) CERT-In வலியுறுத்தியுள்ளது. இதற்கான பாதுகாப்பு திருத்தங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டதால், காலதாமதம் செய்யாமல் அப்டேட் செய்வது அவசியமாகும். தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பில் சிறிய அலட்சியமும் பெரிய தரவுத் திருட்டிற்கு வழிவகுக்கும் என்பதால், ஸூம் பயனர்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.