Page Loader
ஆப்பிள் பயனாளர்களுக்கு 'அதிதீவிர பாதுகாப்பு எச்சரிக்கையை' வழங்கிய CERT-In அமைப்பு
ஆப்பிள் பயனாளர்களுக்கு 'அதிதீவிர பாதுகாப்பு எச்சரிக்கையை' வழங்கிய CERT-In அமைப்பு

ஆப்பிள் பயனாளர்களுக்கு 'அதிதீவிர பாதுகாப்பு எச்சரிக்கையை' வழங்கிய CERT-In அமைப்பு

எழுதியவர் Prasanna Venkatesh
Sep 25, 2023
10:42 am

செய்தி முன்னோட்டம்

ஆப்பிள் பயனாளர்களுக்கு அதிதீவிர பாதுகாப்பு எச்சரிக்கையை வழங்கியிருக்கிறது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும், இந்திய கணினி அவசரகால பதில் குழு (CERT-In). ஆப்பிளின் சஃபாரி பயன்படுத்தும் வெப்கிட் ப்ரௌஸர் இன்ஜினில் பல்வேறு கோளாறுகள் இருப்பதைக் கண்டறிந்திருப்பதாக தங்களுடைய அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டிருக்கிறது CERT-In அமைப்பு. இந்தக் கோளாறானது ஆப்பிள் சாதனங்களான, ஐபோன், ஐபேடு மற்றும் ஆப்பிள் வாட்ச் உள்ளிட்டவற்றில் இருக்கலாம் எனக் குறிப்பிட்டிருக்கிறது அந்த அமைப்பு. இந்தக் கோளாறால், ஆப்பிள் சாதனங்களை ஹேக்கர்கள் ஹேக் செய்து, அதன் கண்ட்ரோல்களை முழுமையாகக் கைப்பற்றி, தகவல்களை திருடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது CERT-In அமைப்பு.

ஆப்பிள்

எந்தெந்த ஆப்பிள் சாதனங்களில் இந்தக் கோளாறு கண்டறியப்பட்டிருக்கிறது? 

ஆப்பிள் ஐஓஎஸ் 16.7 மற்றும் அதற்கு முந்தைய இயங்குதளங்களைக் கொண்ட ஐபோன்கள், ஐபேடு ஓஎஸ் 16.7 மற்றும் அதற்கு முந்தைய இயங்குதளங்களைக் கொண்ட ஐபோன்கள் மற்றும் மேக்ஓஎஸ் 12.7 மற்றும் அதற்கு முந்தைய இயங்குதளங்களைக் கொண்ட ஆப்பிள் மேக்குகள். வாட்ச்ஓஎஸ் 9.6.3 மற்றும் அதற்கு முந்தைய இயங்குதளங்களைக் கொண்ட ஆப்பிள் வாட்ச்கள், ஆப்பிள் சஃபாரி 16.6.1 மற்றும் அதற்கு முந்தைய வெர்ஷன்கள், மேக்ஓஎஸ் வென்சூரா வெர்ஷன் 13.6 மற்றும் அதற்கு முந்தைய வெர்ஷன்கள். மேற்கூறிய இயங்குதளங்களைக் கொண்ட ஆப்பிள் சாதனங்களில் CERT-In குறிப்பிட்ட கோளாறு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாக இருக்கின்றன. எனவே, அனைத்து ஆப்பிள் பயனாளர்களும் சமீபத்திய இயங்குதளத்திற்கு தங்கள் சாதனங்களை அப்டேட் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.