24K தங்கத்தில் பூசப்பட்ட சாம்சங் கேலக்ஸி S24 அல்ட்ரா-வை வெளியிட்ட கேவியர்
கேவியர், ஆப்பிள் மற்றும் சாம்சங் சாதனங்களைத் தனிப்பயனாக்குவதற்காக அறியப்பட்ட உயர்தர பிராண்ட் ஆகும். இந்த நிறுவனம் தற்போது சாம்சங்கின் சமீபத்திய வெளியீடான கேலக்ஸி எஸ்24 அல்ட்ராவுக்கான "எரா ஆஃப் டிராகன்" தொகுப்பை வெளியிட்டுள்ளது. இந்தத் தொகுப்பில் மிகவும் கவர்ச்சிகரமாக கருதப்படுவது 15,000 அமெரிக்கா டாலர் மதிப்புள்ள Galaxy S24 Ultra Yong மாடல் ஆகும். இது ஒரு கருப்பு PVD பூச்சுடன் கூடிய டைட்டானியம் கவரும், கொரிய டிராகனின் 24-காரட் தங்க பூச்சும் வழங்குகிறது. இந்த டிராகன் பதிப்பு, சாம்சங்கின் பலம் மற்றும் கௌரவத்தை பிரதிபலிப்பதுடன், அதன் கொரிய பாரம்பரியத்தை வலியுறுத்துகிறது. டைட்டானியம் பாடி மற்றும் தங்க முலாம் தவிர, Galaxy S24 Ultra Yong மாடலில் CVR ELT3350A Tourbillon உள்ளது.
ராசிக்கேற்ற மாதிரிகளும் அடங்கும்
இந்த புதிய "எரா ஆஃப் டிராகன்" மாடலில் யோங் மாடலைத் தவிர, உங்கள் ராசிக்கேற்ற உருவம் பொறிக்கப்பட்ட மாடல்களும் இடம்பெற்றுள்ளது. இதன் ஆரம்ப விலை 9,000 அமெரிக்க டாலர் என கூறப்பட்டுள்ளது. எனினும் ஃபிளாக்ஷிப் யோங் மாடல், ராசி ஒவ்வொன்றும், தலா 99 பீஸ்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. கேவியர், அதன் ஆடம்பரமான ஸ்மார்ட்போன் வடிவமைப்புகளுக்கு பிரபலமானது. இது சமீபத்தில் $1,100 23 காரட் தங்கம் மற்றும் சாக்லேட் iPhone 15 Pro Max ஐ அறிமுகப்படுத்தியது. ஐபோன் 15 மாடல்களுக்கான, ஹெர்ம்ஸ் தோல் மற்றும் 24 காரட் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த FineWoven கேஸ்கள், $2,060 முதல் $2,200 வரை விலையில் அறிமுகப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.