LOADING...
இந்த எண்களையெல்லாம் மொபைலில் கால் செய்யாதீர்கள்; கால் பார்வர்டிங் மோசடி குறித்து எச்சரிக்கை
இந்தியாவில் அதிகரிக்கும் கால் பார்வர்டிங் மோசடி

இந்த எண்களையெல்லாம் மொபைலில் கால் செய்யாதீர்கள்; கால் பார்வர்டிங் மோசடி குறித்து எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Jan 12, 2026
07:09 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் மொபைல் போன் பயனர்களைக் குறிவைத்து 'கால் பார்வர்டிங்' என்ற புதிய வகை மோசடி வேகமாகப் பரவி வருகிறது. மர்ம நபர்கள் உங்களுக்கு போன் செய்து, தாங்கள் டெலிகாம் நிறுவன ஊழியர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொள்வார்கள். உங்கள் நெட்வொர்க்கில் ஏதோ பிரச்சனை இருப்பதாகவும், அதைச் சரிசெய்ய ஒரு குறிப்பிட்ட எண்ணை டயல் செய்யுமாறும் அவர்கள் கூறுவார்கள். நீங்கள் அதை நம்பி டயல் செய்தால், உங்கள் போனுக்கு வரும் அனைத்து கால்களும் அவர்களின் எண்ணிற்குத் திசைதிருப்பப்படும்.

குறியீடுகள்

ஆபத்தான எண்கள் மற்றும் குறியீடுகள்

மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் *21*, *61*, *67*, *401* போன்ற எண்களுடன் தொடங்கும் குறியீடுகளை டயல் செய்யச் சொல்வார்கள். உதாரணமாக, *401* [மோசடி செய்பவரின் எண்]" என்று உங்களை டயல் செய்யத் தூண்டுவார்கள். நீங்கள் இதைச் செய்தவுடன், உங்கள் சிம் கார்டின் 'கால் பார்வர்டிங்' வசதி ஆக்டிவேட் ஆகிவிடும். இதன் மூலம் உங்கள் வங்கி ஓடிபி, தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வாட்ஸ்அப் ஆக்டிவேஷன் கால்கள் அனைத்தும் மோசடி செய்பவர்களின் கைக்குச் சென்றுவிடும்.

பணம்

வங்கிப் பணத்தைச் சூறையாடும் கும்பல்

உங்கள் போன் கால்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பிறகு, மோசடி செய்பவர்கள் உங்கள் வங்கி கணக்கை ஹேக் செய்ய முயற்சிப்பார்கள். வங்கிப் பரிவர்த்தனைகளுக்குத் தேவையான ஓடிபி கால்கள் மூலம் அவர்களுக்குத் தெரியவரும். இதன் விளைவாக, உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணம் சில நிமிடங்களிலேயே காலியாகும் அபாயம் உள்ளது. மேலும், உங்கள் வாட்ஸ்அப் கணக்கையும் அவர்கள் தங்கள் போனில் லாகின் செய்து, உங்கள் நண்பர்களிடம் பணம் கேட்டு மிரட்டவும் வாய்ப்புள்ளது.

Advertisement

பாதுகாப்பு

உங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி?

அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் கால்களில் சொல்லப்படும் எந்தவொரு குறியீட்டையும் (Code) உங்கள் போனில் டயல் செய்யாதீர்கள். ஒருவேளை உங்கள் கால்கள் ஏற்கனவே பார்வர்டு செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய *#21# என்ற எண்ணை டயல் செய்து சரிபார்க்கலாம். ஒருவேளை பார்வர்டிங் ஆக்டிவேட் ஆகி இருந்தால், அதை உடனடியாக ரத்து செய்ய ##002# என்ற எண்ணை டயல் செய்யவும். எந்தவொரு டெலிகாம் நிறுவனமும் போன் மூலம் இது போன்ற குறியீடுகளை டயல் செய்யச் சொல்லாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Advertisement