Page Loader
திடீரென 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் BYJU'S நிறுவனம்!
1000 பேரை பணி நீக்கம் செய்யும் பைஜூஸ் நிறுவனம்

திடீரென 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் BYJU'S நிறுவனம்!

எழுதியவர் Siranjeevi
Feb 03, 2023
05:56 pm

செய்தி முன்னோட்டம்

உலகப் பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்தின் வீழ்ச்சிக்கு பிரபலமான பல நிறுவனங்கள் ஆட்குறைப்புகளை செய்து வரும் நிலையில், தற்போது BYJU'S நிறுவனம் 900 முதல் 1000 பேரை பணி நீக்கம் செய்யவுள்ளது. இதற்கு முன் கடந்த அக்டோபர் மாதம் பைஜூஸ் நிறுவனம் 2,500 பணியாளர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்தது. ஆனால், இதை உடனடியாக செய்ய முடியாது என மாத கால அளவிற்கு பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவித்தனர். ஒரே வேலையை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் செய்வதைக்குறைக்க 50 ஆயிரம் ஊழியர்களில் இருந்து 5 சதவீதத்தினரைப் பணி நீக்கம் செய்யும் முடிவை பைஜூஸ் எடுத்திருந்தது. அதன்படியே, குழுக்கள் மற்றும் பணியாளர்களில் இருந்து 900 முதல் 1000 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளனர்.

பைஜூஸ் நிறுவனம்

திடீரென 1000 பேரை பணி நீக்கம் செய்ய காரணம் என்ன?

இந்தியாவில் சந்தைப்படுத்தல், வடிவமைப்பு, தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுக்கள் மற்றும் சர்வதேச வணிகத்தில் தயாரிப்புக் குழுக்கள் ஆகிய துறைகளில் இருந்து பணி நீக்கம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தேர்வு செய்யப்பட்ட ஊழியர்கள் 24 மணி நேரத்தில் பணியை விட்டு விலக அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காரணம் என்ன? பைஜூஸ் நிறுவனம் வருவாய் இழப்பு காரணமாக தொடர்ந்து நஷ்டத்தை பதிவு செய்து வருவது பணி நீக்கத்திற்கான முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. கடைசியாக $22 பில்லியன் மதிப்பில் இருந்த ஸ்டார்ட்அப், FY21 இல் ரூ.4,564.38 கோடி இழப்பைப் பதிவு செய்திருந்தது. இவை முந்தைய ஆண்டான FY20 ஏற்பட்ட 305.5 கோடி ரூபாயை விட பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.