
ரத்தன் டாட்டாவை சந்தித்த பில்கேட்ஸ் - கொடுத்த ஆச்சர்யமான பரிசு என்ன?
செய்தி முன்னோட்டம்
உலகின் கோடீஸ்வரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். அப்போது அவர் ரத்தன் டாட்டாவை சந்தித்து ஆச்சரியமான பரிசை ஒன்றையும் கொடுத்துள்ளார்.
இதனிடையே, ரத்தன் டாட்டாவுடனான சந்திப்பு குறித்து பில்கேட்ஸ் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில், எங்கள் இணை நிறுவனர் பில் கேட்ஸ் அவர்கள் ரத்தன் டாட்டா மற்றும் என். சந்திரசேகர் ஆகியோர்களை சந்தித்து ஆரோக்கியமான பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தியாவில் ஆரோக்கியம், நோய் கண்டறிதல், ஊட்டச்சத்துக்கான எங்கள் பணியை வலுப்படுத்த நாங்கள் முயற்சி செய்து உள்ளோம் என்றும் இதுகுறித்து ரத்தன் டாடாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும்" தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரத்தன் டாட்டாவுக்கு, பில்கேட்ஸ் ' அடுத்த தொற்று நோயை தடுப்பது எப்படி' மற்றும் 'காலநிலை பேரழிவை தவிர்ப்பது எப்படி' ஆகிய புத்தகங்களையும் பரிசாக வழங்கி இருக்கிறார்.
ட்விட்டர் அஞ்சல்
ரத்தான் டாட்டாவிற்கு ஆச்சரியமான பரிசை கொடுத்த பில்கேட்ஸ்
Our co-chair founder, @BillGates had an enriching discussion with @RNTata2000 N. Chandrasekaran, about their philanthropic initiatives. We look forward to strengthening our work together partnering for health, diagnostics, and nutrition. pic.twitter.com/Xqs1hooDyX
— Gates Foundation India (@BMGFIndia) March 1, 2023