அடிக்கடி கிரெடிட் கார்டு மூலம் ஆன்லைன் ஷாப்பிங் செய்பவரா?உஷார்!!
ஆன்லைன் ஷாப்பிங்கில், போலி டெலிவரி OTP மூலம், கிரெடிட் கார்டு-ஐ பயன்படுத்துவோரை குறி வைத்து, ஒரு புது மோசடி நடைபெற்று கொண்டிருக்கிறது. நீங்கள் ஆர்டர் செய்யாமலேயே, திடீரென்று ஒருவர், உங்களுக்காக ஒரு பொருளை டெலிவெரி செய்ய வந்தால், அப்போது தான் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வரும் மோசடி நபர், உங்கள் மொபைலுக்கு வந்துள்ள OTP பற்றி கேட்கலாம். பெறப்படும் OTP மூலம், உங்களது பணத்தை திருட வாய்ப்புள்ளது. நீங்கள் மறுக்கும்பட்சத்தில், அதை நிராகரிக்க ஒரு OTP வரும் எனவும், அதை கூறும்படியும் வற்புறுத்துவார். ஒரு வேளை, நீங்கள் உண்மையாகவே பொருளை ஆர்டர் செய்திருந்தால், பார்ஸலை பெற்று, அது நீங்கள் ஆர்டர் செய்த பொருள் தானா என உறுதி செய்யவும்.
ஆன்லைன் ஷாப்பிங் மோசடி
உங்கள் போனிற்கு வரும் எந்த ஒரு தெரியாத இணைப்பையும் கிளிக் செய்யாதீர்கள். அதும் ஒரு மோசடியாக இருக்க கூடும். முக்கியமாக, தெரியாத, அறிமுகம் இல்லாத, எந்த ஒரு ஆன்லைன் நிறுவனத்திடமும், பரிவர்த்தனை செய்ய வேண்டாம். குறிப்பாக உங்கள் வங்கிக்கணக்கு விவரங்கள் , மொபைல் நம்பர் உள்ளிட்ட விவரங்களைத் தெரிவிக்க வேண்டாம். கிரெடிட் கார்டு மூலம் வாங்க நேரிட்டால், இரு மடங்கு கவனத்துடன் கையாளவும். உங்கள் ஷாப்பிங் அனுபவம் அல்லது வாங்கப்பட்ட பொருளை உறுதி செய்யுங்கள் என தெரியாத நம்பரிடம் இருந்து வரும் மெசேஜ்/அழைப்பை ஏற்க வேண்டாம். அப்படியே பேச நேர்ந்தாலும், உங்களுடைய ஓடிபி -ஐ பகிர வேண்டாம். எந்த ஒரு வணிக தளமோ, வங்கியோ ஓடிபி-ஐ வாடிக்கையாளரிடம் கேட்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.