கலர் கலராக மாறும் வாட்ச் பேண்ட் - அறிமுகம் செய்த ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனத்திம் வாட்ச் மாடல்களில் பயன்படுத்த இருக்கும் புதிய வகை பேண்ட் விவரங்கள் பற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ஆப்பிள் நிறுவனம் விசேஷ எலெக்ட்ரோக்ரோமிக் அம்சம் கொண்ட ஆப்பிள் வாட்ச் பேண்ட்-க்கு ஆப்பிள் நிறுவனம் காப்புரிமை பெற்று இருக்கிறது. இந்த சிறப்பு அம்சத்தை பயன்படுத்திக் கொண்டு பயனர்கள் பேண்ட் நிறத்தை மூன்று வழிகளில் அட்ஜஸ்ட் செய்து அதன் நிறத்தை மாற்றிக் கொள்ளலாம். இதற்கு பயனர்கள் பேண்ட்-ஐ கழற்றி மாற்ற வேண்டிய அவசியத்தை நீக்கி இருக்கிறது. இதுமட்டுமின்றி, பயனர்கள் தங்களின் வாட்ச் பேண்ட்களை அடிக்கடி கஸ்டமைஸ் செய்து அதன் ஸ்டைல் மற்றும் நிறத்தை வித்தியாசப்படுத்த நினைப்பர், புதிய தொழில்நுட்பம் இதற்கான தீர்வை வழங்கி விட்டது.
நிறம் மாறும் வாட்ச் பேண்ட்டை அறிமுகம் செய்த ஆப்பிள் நிறுவனம்
வழக்கமான வாட்ச்களில் பேண்ட் நிறத்தை மாற்ற, ஒவ்வொரு முறையும் வேறு நிறம் கொண்ட பேண்ட்களை பயன்படுத்த வேண்டிய சூழல் நிலவி வருகிறது. அதற்கு மாற்று வழியாக ஆப்பிள் நிறுவன இதை கையாண்டுள்ளது. மேலும், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய நிறங்களை கொண்டு பயனர்கள் தகவல் பரிமாற்றத்தையும் செய்ய முடியும் என காப்புரிமை விவரங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனவே கலர் அட்ஜஸ்ட் செய்யும் கூறுகளை ஒருங்கிணைக்கவோ அல்லது தனித்தனியாக கண்ட்ரோல் செய்து குறிப்பிடத்தக்க ஐகான், வடிவம் அல்லது எழுத்துக்களை வெளிப்படுத்த முடியும். இந்த வாட்ச் பேண்ட் ஆடை மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.