விரைவில் விற்பனைக்கு வருகிறது ஆப்பிள் விஷன் புரோ ஹெட்செட்
செய்தி முன்னோட்டம்
ஆப்பிள் தனது முதல் விஷன் ப்ரோ ஹெட்செட் விளம்பரத்தை "கெட் ரெடி" என்ற தலைப்பில் நேற்று வெளியிட்டுள்ளது.
மேலும், வரும் 19 ஆம் தேதி முதல், இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச அளவிலான டெவெலப்பர்ஸ் மாநாட்டில், இந்த சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள்.
கேமிங் மற்றும் வீடியோ கன்டென்ட்டுகளை விரும்பும் பயனர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை தரும் நோக்கில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆப்பிளின் எம்2 சிப், 256ஜிபி ஸ்டோரேஜ், விஷன் ஓஎஸ் எனும் இயங்குதளம் மூலமாக இது இயங்குகிறது.
பயனர்கள் தங்களது கண்கள், குரல் மற்றும் கைகள் மூலமாக இந்த சாதனத்தை கன்ட்ரோல் செய்யலாம். இதில் கேமரா, மைக்ரோபோன் மற்றும் சென்சார்கள் உள்ளன.
card 2
ஆப்பிளின் விஷன் ப்ரோ ஹெட்செட்டுக்கான இன்-ஸ்டோர் டெமோக்கள்
விஷன் ப்ரோ ஹெட்செட்டை வாங்குவதற்கு முன் முயற்சி செய்ய விரும்புவோருக்கு, ஆப்பிள் அதன் சில்லறை விற்பனைக் கடைகளில் டெமோக்களை வழங்கும்.
இந்த நடைமுறை அனுபவமானது, வாடிக்கையாளர்களை இந்த சூப்பர் தயாரிப்பின், அம்சங்களையும் திறன்களையும் நேரடியாகச் சோதித்து பார்த்து வாங்குவதற்கு ஒரு வாய்ப்பை தருகிறது.
ஆப்பிள் நிறுவனம், இந்த சாதனத்தை பிப்ரவரி 2 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தயாராகி வருகிறது.
அதற்கு முன்னர், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்யவே தற்போது விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.
இருப்பினும், விஷன் ப்ரோ, அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இதன் விலை சுமார் 3,499 USD. இந்தியாவில் இந்த சாதனம் விற்பனை குறித்த விவரம் தற்போது தெரிவிக்கப்படவில்லை.