LOADING...
ஐபோன் 18 வெளியீட்டில் திடீர் மாற்றம்? 2026-ல் ஆப்பிள் எடுக்கப்போகும் 'ரிஸ்க்'
'ஐபோன் 18' வெளியீட்டை ஆப்பிள் நிறுவனம் 2027-ஆம் ஆண்டிற்கு தள்ளிவைக்கத் திட்டமிட்டுள்ளது

ஐபோன் 18 வெளியீட்டில் திடீர் மாற்றம்? 2026-ல் ஆப்பிள் எடுக்கப்போகும் 'ரிஸ்க்'

எழுதியவர் Venkatalakshmi V
Jan 02, 2026
12:17 pm

செய்தி முன்னோட்டம்

ஆப்பிள் நிறுவனம் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் புதிய ஐபோன் மாடல்களை அறிமுகப்படுத்துவது வழக்கம். ஆனால், வரும் 2026-ஆம் ஆண்டு இந்த மரபில் மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. MacRumours வெளியிட்ட தகவலின்படி, 2026 செப்டம்பர் மாதம் வெளியாக வேண்டிய 'ஐபோன் 18' (base model) வெளியீட்டை ஆப்பிள் நிறுவனம் 2027-ஆம் ஆண்டிற்கு தள்ளிவைக்கத் திட்டமிட்டுள்ளது. ஒரே நேரத்தில் அனைத்து மாடல்களையும் வெளியிடாமல், ஆண்டிற்கு இரண்டு முறை புதிய போன்களை அறிமுகப்படுத்தும் உத்தியை (Two-part launch strategy) ஆப்பிள் கையில் எடுக்கவுள்ளது.

காரணம்

வெளியீட்டு மாற்றத்திற்கான காரணம் என்ன?

அதன்படி, 2026 செப்டம்பரில் பிரீமியம் மாடல்களான ஐபோன் 18 ப்ரோ(Pro), ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்(Pro Max) மற்றும் ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன்(Foldable iPhone) ஆகியவை மட்டுமே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தள்ளிவைக்கப்பட்ட ஐபோன் 18 மாடல், ஐபோன் 18e மற்றும் ஐபோன் ஏர் (iPhone Air) ஆகியவற்றுடன் 2027-ஆம் ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம். மடிக்கக்கூடிய ஐபோன் மற்றும் ப்ரோ மாடல்கள் மீது மக்களின் கவனத்தை ஈர்க்கவும், அவற்றின் விற்பனையை அதிகரிக்கவும் ஆப்பிள் இந்த முடிவை எடுத்திருக்கும் என டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவிக்கிறது. ஒரே நேரத்தில் பல மாடல்களை தயாரிப்பதில் ஏற்படும் பணிச்சுமையை குறைக்கவும், வருவாயை ஆண்டு முழுவதும் சீராக வைத்திருக்கவும் இந்தத் திட்டம் உதவும்.

Advertisement