LOADING...
ஆப்பிள் நிறுவனம் இதுவரை தயாரித்த மிக மெல்லிய iPhone Air அறிமுகம்
இதுவரை தயாரிக்கப்பட்டதிலேயே மிகவும் மெல்லிய ஐபோன் என்று கூறப்படுகிறது

ஆப்பிள் நிறுவனம் இதுவரை தயாரித்த மிக மெல்லிய iPhone Air அறிமுகம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 10, 2025
12:12 am

செய்தி முன்னோட்டம்

ஆப்பிள் இன்று iphone air -ஐ அறிமுகப்படுத்தியது, இது இதுவரை தயாரிக்கப்பட்டதிலேயே மிகவும் மெல்லிய ஐபோன் என்று கூறப்படுகிறது. இன்று நடந்த Awe Dropping நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் இதனுடன் iPhone 17, iPhone 17 Pro மற்றும் iPhone 17 Pro Max, AirPods Pro 3, Apple Watch Series 11, SE 3 மற்றும் Apple Watch Ultra 3 ஆகியவற்றையும் வெளியிடப்பட்டது. இந்த iphone ஏர் 5.6 மிமீ மட்டுமே அகலம். முன்னதாக மெல்லிய போன் என விளம்பரப்படுத்தப்பட்ட ஐபோன் 6 இன் 6.9 மிமீ அளவை விட மெல்லியது.

அம்சங்கள்

மெல்லிய வடிவமைப்பு மற்றும் ப்ரோ அம்சங்கள்

ஐபோன் ஏரின் முக்கிய அம்சம் அதன் மெல்லிய சேசிஸ் ஆகும். இது முன் மற்றும் பின்புறத்தில் டைட்டானியம் பிரேம் மற்றும் செராமிக் ஷீல்ட் 2 ஐக் கொண்டுள்ளது. ஐபோன் ஏரின் பின்புறத்தில் ஒரே ஒரு கேமரா மட்டுமே உள்ளது. இது 48-மெகாபிக்சல் சென்சாரைப் பயன்படுத்துகிறது. முன்பக்கத்தில், 24-மெகாபிக்சல் சென்சார் கொண்ட புதிய அகல கேமரா உள்ளது. 6.5-இன்ச் ப்ரோமோஷன் டிஸ்ப்ளே கொண்ட ஐபோன் ஏர், அதிநவீன வடிவமைப்பு கொண்டுள்ளது. ஏர் ஐபோன் 17 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் போன்ற அதே 3-நானோமீட்டர் A19 ப்ரோ சிப்பைக் கொண்டுள்ளது. இது பின்புற மற்றும் முன் கேமராக்களிலிருந்து ஒரே நேரத்தில் வீடியோ பதிவை எடுக்க அனுமதிக்கிறது. இதன் RAM 8 ஜிபி ஆகும்.

விலை

விலை மற்றும் நிறங்கள்

ஐபோன் 17 ஏர் இன்று செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 9, 2025 முதல் முன்கூட்டிய ஆர்டருக்குக் கிடைக்கும். 256 ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய அடிப்படை மாடல் ரூ .1,19,900 முதல் தொடங்குகிறது. இது கருப்பு, வெள்ளை, தங்கம் மற்றும் ஸ்கை ப்ளூ ஆகிய நான்கு நிறங்களில் வருகிறது. தினசரி விற்பனை, செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.