Page Loader
ஆப்பிள் WWDC 2023: இந்த நிகழ்வில் வெளியான மின்சாதன அறிவிப்புகள் என்னென்ன?
WWDC 2023 நிகழ்வில் ஆப்பிள் வெளியிட்ட மின்சாதனங்கள் குறித்த அப்டேட்கள்

ஆப்பிள் WWDC 2023: இந்த நிகழ்வில் வெளியான மின்சாதன அறிவிப்புகள் என்னென்ன?

எழுதியவர் Prasanna Venkatesh
Jun 06, 2023
07:00 am

செய்தி முன்னோட்டம்

ஆப்பிள் ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த WWDC 2023 நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு கலிஃபோர்னியாவில் உள்ள ஆப்பில் பார்க்கில் இந்த நிகழ்வு தொடங்கியது. இந்த நிகழ்வில் வெளியான ஆப்பிள் சாதனங்கள் குறித்த அறிவிப்புகள் என்னென்ன? 15-இன்ச் மேக்: தங்களுடைய 15-இன்ச் மேக்புக் ஏர்-ஐ இந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம். கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட M2 சிப்புடன் இந்த மேக்புக்கை வெளியிட்டிருக்கிறது ஆப்பிள், விலை: 1,299 டாலர்கள். M2 அல்ட்ரா ப்ராசஸர்: தங்களுடைய மிகவும் பவர்ஃபுல்லான ஃப்ளாக்ஷிப் சிப்பான M2 அல்ட்ராவை இந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள். மேலும், இந்த புதிய சிப்பை பயன்படுத்தி சில சாதனங்களையும் இந்த நிகழ்வில் வெளியிட்டிருக்கிறது ஆப்பிள்.

ஆப்பிள்

WWDC 2023 நிகழ்வில் ஆப்பிளின் அறிவிப்புகள்: 

மேக் ஸ்டூடியோ: தற்போது விற்பனையாகி வரும் மேக் ஸ்டூடியோவில் M1 மேக்ஸ் மற்றும் M1 அல்ட்ரா சிப்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும். தற்போது இதனை அப்டேட் செய்யும் வகையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்பட்ட M2 மேக்ஸ் மற்றும் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் M2 அல்ட்ரா சிப்களைக் கொண்ட புதிய மேக் ஸ்டூடியோக்களை வெளியிட்டிருக்கிறது ஆப்பிள், விலை: 1,999 டாலர்கள் முதல் தொடக்கம். மேக் ப்ரோ: M2 அல்ட்ரா சிப்புடன் உருவாக்கப்பட்ட மேக் ப்ரே வொர்க்ஸ்டேஷனையும் இந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள். இன்டெல் ப்ராசஸர்களில் இருந்து மாற்றத்தை எதிர்கொள்ளும் கடைசி ஆப்பிள் சாதனம் இந்த மேக் ப்ரோ வொர்க்ஸ்டேஷன், விலை: 6,999 டாலர்கள்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post