நிலவில் மனிதன் கால்வைத்து 55 ஆண்டுகள் ஆகிறது
நிலவில் மனிதன் கால்வைத்து இந்த வாரத்துடன் 55 ஆண்டுகள் ஆகிறது. நாசாவின் அப்பல்லோ 11 விண்கலத்தில் சென்ற நீல் ஆம்ஸ்ட்ரோங் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் தான் நிலவிற்கு முதன்முதலாக சென்ற மனிதர்கள் ஆவர். அப்பல்லோ 11 ஜூலை 16, 1969 அன்று சந்திரனுக்கு புறப்பட்டது. அதன் பிறகு அப்பல்லோ லூனார் மாட்யூல் ஈகிள் அதே வருடம் ஜூலை 20ஆம் தேதி நிலவில் தரையிறங்கியது. விண்வெளி வீரர்களான நீல் ஏ. ஆம்ஸ்ட்ராங், மைக்கேல் காலின்ஸ் எட்வின் இ மற்றும் "பஸ்" ஆல்ட்ரின் ஆகியோர் நிலவுக்கு முதன்முதலாக சென்று வரலாறு படைத்தனர்.
அடுத்த நிலவு பயணத்திற்கு தயாராகி வருகிறது நாசா
அதில் நீல் ஏ. ஆம்ஸ்ட்ராங்கும், "பஸ்" ஆல்ட்ரினும் நிலவில் கால் வைத்தனர். நீல் ஆம்ஸ்ட்ராங் முதலில் நிலவில் தரையிறங்கினார். அவரை தொடர்ந்து, "பஸ்" ஆல்ட்ரினும் நிலவில் வைத்தார். இதற்கிடையில், விமானியாக இருந்த மைக்கேல் காலின்ஸ், கமாண்ட் மாட்யூல் கொலம்பியாவை சந்திர சுற்றுப்பாதையில் பறக்கவிட்டு கொண்டிருந்தார். இந்த சம்பவம் நடந்து நேற்றுடன் 55 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில், அடுத்த நிலவு பயணத்திற்கு மூன்று விண்வெளி வீரர்கள் தயாராகி வருவதைக் காட்டும் பல படங்களை நாசா பகிர்ந்துள்ளது. சாட்டர்ன் V ராக்கெட்டில் உள்ள குழுவினருடன் ஆயிரக்கணக்கான மக்கள் சேர்ந்து நிற்பதை காட்டும் புகைப்படங்களும் பகிரப்பட்டுள்ளன.