ஆண்ட்ராய்டு 13 - இப்போது பிளைட் மோடில் கூட வைஃபையை இயக்கலாம்
அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் ஃபிளைட் மோட் ஒரு கட்டாய செயலியாக அமையப்பெற்று இருக்கும். எனினும், அந்த மோட்-ஐ உபயோகிக்கும் பொழுது, கூகுள் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் வைஃபை மற்றும் புளூடூத் போன்ற இணைப்புத் திறன் செயல்படா வண்ணம் இருந்தது. பிற்பாடு, ஆண்ட்ராய்டு 11 இல் வெளிவந்த கூகிள் பிக்ஸல் வரிசையில், புளூடூத் இணைப்பு மட்டும் செயல் படுத்த அனுமதித்தது. இதன் மூலம் பயனர்கள் தங்கள் ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஹெட்போன்ஸ் பயன்படுத்த முடியும். எனினும் வைஃபை செயல் படுத்த முடியாது என தெரிவித்து இருந்தது. கூகிள் பிக்ஸல் அடுத்த கட்டமாக மற்றுமொரு புதிய மாற்றத்தை வழங்கி உள்ளது. ஆண்ட்ராய்டு 13 பயனாளர்கள் இப்பொழுது பிளைட் மோடில் இருக்கும்போதும் வைஃபையை இயக்கலாம் என தெரிவித்து உள்ளது.
கூகிள் பிக்ஸல்
முன்னதாக ஃபிளைட் மோட் மற்றும் போது, வைஃபை மற்றும் செல்லுலார் இணைப்புகள் சுவிட்ச் ஆஃப் செய்யப்படும். இப்போது, பயனர்கள் தங்கள் மொபைல்-இல் உள்ள செட்டிங்ஸ் வசதியில் மாற்றி அமைக்கலாம். இந்த வசதியைப் பெற, உங்கள் பிக்சல் சாதனத்தில்ஆண்ட்ராய்டு 13 ஐ நிறுவியிருக்க வேண்டும். உங்கள் மொபைல்-இல் இருக்கும் ஆண்ட்ராய்டு வெர்ஷன் பற்றி தெரிந்து கொள்ள, செட்டிங்ஸ்-> அபௌட் போன் சென்று கண்டறியலாம். உங்கள் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 இல் இயங்கவில்லை என்றால், அதை கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து பெறலாம். பின்னர், செட்டிங்ஸ்-> நெட்வொர்க் அண்ட் இன்டர்நெட் சென்று பிலைட் மோட் வசதியை தேர்ந்து எடுக்கவும். பிறகு, செட்டிங்ஸ்-> நெட்வொர்க் அண்ட் இன்டர்நெட்-இல் உள்ள வைஃபை வசதியை ஆன் செய்து பயன்படுத்தலாம்.