ஓலா ஸ்கூட்டரை முறியடிக்க வந்த ஆம்பியர் பிரைமஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!
இந்தியாவின் முன்னணி ஸ்டார்ட் அப் மின் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஆம்பியர் ஒன்றாக உள்ளது. இந்த நிறுவனம் ஓர் புதிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. அவை, ஆம்பியர் பிரைமஸ் (Ampere Primus) எனும் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் களமிறக்கியுள்ளது. இதற்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமாக 1 லட்சத்து 9 ஆயிரத்து 900 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அறிமுகத்தைத் தொடர்ந்து ஆம்பியர் பிரைமஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு புக்கிங் பணிகளும் இந்தியாவில் தொடங்கி இருக்கின்றன. ரூ.499 செலுத்தி வாடிக்கையாளர்கள் புக் செய்துக் கொள்ளலாம். இதை ஆன்லைன் மற்றும் அதிகாரப்பூர்வ ஷோரூம் என இரு வழிகளிலும் புதிய ஆம்பியர் பிரைமஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான புக்கிங் செய்யமுடியும்.
ஆம்பியர் பிரைமஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - விலை அம்சங்கள் என்ன?
அம்சங்கள் என்ன? ஆம்பியர் ஸ்கூட்டர் ஓர் முழு சார்ஜில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 100 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 77 கிமீ ஆகும். 5 செகண்டில் பூஜ்ஜியத்தில் இருந்து 40 கிமீ வேகத்தை எட்டுவிடும், இதில், ரிவர்ஸ் மோட் ஆனது, எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ரிவர்ஸ் எடுக்க மட்டுமே பயன்படும். ப்ளூடூத் இணைப்பு, நேவிகேஷன், செல்போன் இணைப்பு வசதி உள்ளது. ஒட்டுமொத்தமாக நான்கு விதமான நிற தேர்வுகளில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு வழங்க இருப்பதாக ஆம்பியர் அறிவித்து இருக்கின்றது. மேலும், இது ஹீரோ எலெக்ட்ரிக், ஓலா எலெக்ட்ரிக் மற்றும் ஒகினாவா உள்ளிட்ட நிறுவனங்களின் மின்சார ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.