Page Loader
ChatGPT கண்டு அலறிய அமேசான் நிறுவனம் - ஊழியர்களுக்கு விடுத்த எச்சரிக்கை!
ChatGPT ஆல் அமேசான் ஊழியர்களுக்கு எச்சரிக்கை

ChatGPT கண்டு அலறிய அமேசான் நிறுவனம் - ஊழியர்களுக்கு விடுத்த எச்சரிக்கை!

எழுதியவர் Siranjeevi
Feb 01, 2023
05:03 pm

செய்தி முன்னோட்டம்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கூட்டணியில் உருவாகியுள்ள ChatGPT ஆன்லைன் கருவி தற்போது பிரபலமாகியுள்ள நிலையில், அமேசான் ஊழியர்கள் அதனை பயன்படுத்த எச்சரிக்கை விடுத்துள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கூட்டணியில், கடந்த நவம்பர் மாதம் இறுதியில் உருவாக்கப்பட்ட தளம் ChatGPT . இது முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு, மொழியில் நுட்பங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில், கூகுளைப்போலவே நமக்குத் தேவையான அனைத்து விஷயங்களும் நொடிப்பொழுதில் பெற முடியும். இந்த ChatGPT ஆரம்பத்திலேயே கிட்டத்தட்ட ஒரே வாரத்தில் ஒரு மில்லியன் பேர் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். அந்த அளவிற்கு இது போட்டியாக வளர்ந்ததால் கூகுள் நிறுவனம் மிகப்பெரிய அச்சத்தில் உள்ளது.

அமேசான்

ChatGPT கண்டு அலறிய அமேசான் - ஊழியர்களுக்கு கொடுத்த எச்சரிக்கை என்ன?

இந்நிலையில், சாட் ஜிபிடி கருவியை பயன்படுத்துவது குறித்து அமேசான் நிறுவன ஊழியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கிடைத்த தகவலில், அமேசான் ஊழியர்கள் அன்றாட சிக்கல்ககள், ஆராய்ச்சிகள், இமெயில்களுக்காக சாட் ஜிபிடி தளத்தைப் பயன்படுத்துவதாக தெரிகிறது. இதனால், அமேசான் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளும், தொழில்நுட்ப வல்லுநர்களும் ஊழியர்களை எச்சரித்துள்ளனர். ஏனென்றால், சாட் ஜிபிடி தளத்தில் அமேசான் அலுவல் தொடர்பான விஷயங்கள் இருப்பது தெரியவந்தது. அதன் பின்னே, இம்மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கூகுளுக்கு போட்டியாக, மைக்ரோசாப்ட் OpenAI இல் அதிக முதலீடு செய்கிறது. பயனர் அனுபவத்தை மேம்படுத்த ChatGPT அதன் உள் தளங்களில் ஒருங்கிணைக்கும் என்று மென்பொருள் நிறுவனமான சமீபத்தில் அறிவித்தது.