
புதிய 'ப்ளூ ரிங்' விண்வெளி தளத்தை அறிமுகப்படுத்திய ஜெஃப் பஸாஸின் ப்ளூ ஆரிஜின்
செய்தி முன்னோட்டம்
அமேசான் நிறுவனர் ஜெஃப் பஸாஸின் விண்வெளி சேவை நிறுவனமான ப்ளூ ஆரிஜின், ப்ளூ ரிங் என்ற புதிய விண்வெளி தளமொன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
விண்வெளியில் பூமியின் இடைத்தர சுற்றுவட்டப்பாதை முதல் பூமி மற்றும் நிலவுக்கு இடைப்பட்ட பகுதி வரை செயல்படுத்தப்படும் விண்வெளித் திட்டங்களுக்குத் தேவையான உதவிகளை வணிகச் சேவையாக இந்த ப்ளூ ரிங் மூலம் செய்யவிருக்கிறது ப்ளூ ஆரிஜின் நிறுவனம்.
அமேசான் மூலம் பூமியில் டெலிவரி சேவைகளை வழங்கி வந்த ஜெஃப் பஸாஸ், ப்ளூ அரிஜினின் ப்ளூ ரிங் மூலம் விண்வெளியிலும் டெலிவரி சேவைகளை வழங்கவிருக்கிறார்.
பூமியிலிருந்து விண்வெளிக்கு பொருட்களை எடுத்துச் செல்வது, விண்கலங்களுக்கு எரிபொருள் நிரப்புவது, தகவல் பறிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ப்ளூ ரிங் மூலம் வழங்கவிருக்கிறது ப்ளூ ஆரிஜின்.
விண்வெளி
ப்ளூ ஆரிஜின் நிறுவனத்திற்கு புதிய சிஇஓ:
புதிய ப்ளூ ரிங் திட்டம் மூலம் இரண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காணவிருக்கிறது ப்ளூ ஆரிஜின் நிறுவனம். விண்வெளி உட்கட்டமைப்பு மற்றும் சுற்று வட்டப்பாதைகளுக்கு இடையேயான போக்குவரத்து ஆகிய இரண்டு சவால்களை எதிர்கொள்கிறது ப்ளூ ரிங்.
பல்வேறு உலக நாடுகள் மற்றும் வணிக நிறுவங்களுக்கும் இந்த ப்ளூ ரிங் மூலம் விண்வெளி சேவைகளை வழங்கவிருக்கிறது ப்ளூ ஆரிஜின்.
புதிய திட்டங்களை செயல்படுத்தி வரும் ப்ளூ ஆரிஜின் நிறுவனமானது புதிய தலைமை செயல் அதிகாரியையும் பெறவிருக்கிறது.
ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் தற்போதைய சிஇஓவான பாப் ஸ்மித் ஜனவரி 2ம் தேதி பதவி விலகவிருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக டிசம்பர் 4ம் தேதி புதிய சிஇஓவாக டேவ் லிம்ப் பொறுப்பேற்றுக் கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.